
டெஸ்ட்
இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா கடைசி போட்டியில் மீண்டு வந்தது. இதனால் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மாற்றம் இல்லாமல் முதல் இடத்திலேயே இருக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். முதல்முறையாக புவனேஷ்வர்குமார் டெஸ்ட் தரவரிசையில் 20வது இடம் பிடித்துள்ளார். இஷாந்த் சர்மா 26வது இடம் பிடித்துள்ளார். பும்ரா மொத்தமாக முன்னேறி 46வது இடம் பிடித்துள்ளார்.

ராக்கிங் அஸ்வின்
இந்த தொடரில் வாய்ப்பே அளிக்கப்படாத ஜடேஜா இன்னும் 844 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அஸ்வின் 5 வது இடத்தில் தொடர்ந்து 803 புள்ளிகளுடன் இருக்கிறார். முதல் இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.

சாதனை
இதில் கோஹ்லி புதிய சாதனை படைத்து இருக்கிறார். இவர் 912 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் லாராவின் 911 புள்ளிகள் சாதனையை முறியடித்து உள்ளார். இதில் மொத்தமாக டான் பிராட்மேன் 964 புள்ளிகளுடன் முதலில் இருக்கிறார். தற்போதைய தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications