For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னோட ரெக்கார்டை முறியடிக்க அவரு ஒருத்தருக்கு தான் தில் இருக்கு... யாரை சொல்றீங்க சங்கக்கரா?

லண்டன்: உலக கோப்பையில் தமது சாதனையை விராட் கோலி ஒருவரால் தான் முறியடிக்க முடியும் என்று சங்ககாரா அதிரடியாக கூறியிருக்கிறார்.

அனைவரின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பின்ச், வார்னர், ஜோ ரூட், ரோகித் சர்மா, இயன் மோர்கன், கேன் வில்லியம்சன் என பலரின் ஆட்டம் ரசிகர்களை ஏக உற்சாகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரை தொடக்க வீரர்கள் அபாரம். அவர்களின் சிறப்பான ஆட்டம், ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

பிட்சா இது? ஸ்விங், வேகம் எதுவும் இல்லை, சுத்த வேஸ்ட்.. இங்கிலாந்து மானத்தை வாங்கும் இந்திய பவுலர் பிட்சா இது? ஸ்விங், வேகம் எதுவும் இல்லை, சுத்த வேஸ்ட்.. இங்கிலாந்து மானத்தை வாங்கும் இந்திய பவுலர்

பெரிய இன்னிங்ஸ் இல்லை

பெரிய இன்னிங்ஸ் இல்லை

தொடக்க வீரர்களே அதிக நேரம் களத்தில் நின்று சிறப்பாக ஆடுவதால் கோலிக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பு வரவில்லை. அதனால் அவர் இன்னும் ஒரு சதம் கூட அடிக்காமல் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக சதமடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும், 88 ரன்களில் ஆட்டமிழந்து அதை தவற விட்டார்.

4 சதங்கள் அடித்தவர்

4 சதங்கள் அடித்தவர்

உலக கோப்பை வரலாற்றில் கடினமான, யாரும் எதிர்பார்க்காத ஒரு சாதனையை இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா படைத்துள்ளார். 2015ம் ஆண்டு உலக கோப்பையில் வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கு எதிராகவும் அடுத்தடுத்து சதமடித்தார். அதன் மூலம் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முறியடிக்க முடியுமா?

முறியடிக்க முடியுமா?

இந்த சாதனையை முறியடிப்பது எப்பேர்ப்பட்ட வீரருக்குமே எளிதல்ல. ஆனால் எல்லா சாதனைகளுமே ஒருநாள் முறியடிக்கப்படும். அப்படி தனது சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்று சாதனைக்கு சொந்தக்காரரான சங்கக் கராவே தெரிவித்துள்ளார்.

கோலியால் முடியும்

கோலியால் முடியும்

இதுகுறித்து பேசிய சங்கக்கரா, தனது சாதனையை கோலியால் மட்டுமே முறியடிக்க அல்லது சமன் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது: இந்த சாதனையை முறியடிப்பது எப்பேர்ப்பட்ட வீரருக்குமே எளிதான விஷயம் அல்ல.

சீரான ஆட்டம்

சீரான ஆட்டம்

ஆனால் எல்லா சாதனைகளுமே ஒருநாள் முறியடிக்கப்படும். அப்படி தனது சாதனையை ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும். அவர் வேறு யாருமல்ல... விராட் கோலி தான். தொடர்ச்சியாக சீரான மற்றும் நிலையான ஆட்டத்தை அவர் தான் வெளிப்படுத்தி வருகிறார். அவரால் மட்டுமே தனது சாதனையை சமன் செய்ய முடியும் என்றார்.

Story first published: Friday, June 21, 2019, 18:14 [IST]
Other articles published on Jun 21, 2019
English summary
Virat kohli is the only man who able to beat my century records in world cup says kumar sangakkara.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X