ஃபார்ம்க்கு திரும்பியது எப்படி? கோலி கூறிய ரகசியம்.. 90 நிமிட பயிற்சி குறித்து விளக்கம்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசினில் 3 முறை கோல்டன் டக்கான விராட் கோலி, நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார்.

Recommended Video

Virat Kohli-யின் அதிரடி! வாழ்வா சாவா போட்டியில் RCB வெற்றி | #Cricket

54 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 73 ரன்களை விளாசி அசத்தினார்.

கோலியின் ஆட்டத்தால் முக்கிய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஃபார்ம்க்கு திரும்பியது குறித்து கோலி விளக்கினார்.

ஐபிஎல் இறுதி போட்டி நேரம் மாற்றம்.. பிசிசிஐ முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு.. சிவராத்தரி தான் இனிஐபிஎல் இறுதி போட்டி நேரம் மாற்றம்.. பிசிசிஐ முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு.. சிவராத்தரி தான் இனி

எனக்கு என்ன நடக்கிறது?

எனக்கு என்ன நடக்கிறது?

தொடர்ந்து அவுட்டாகி வந்ததும், எனக்கு என்ன நடக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கிவிட்டேன். 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது என் கேட்ச் மிஸ் ஆனது, அப்போது 2014ஆம் ஆண்டு சொதப்பியது நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று சதம் விளாசினேன். அதன் பிறகு நான் சிறப்பாக விளையாட தொடங்கினேன். இது போல் நிறைய முறை நிகழ்ந்துள்ளது. ஆனால் அப்போது எல்லாம் (கேட்ச் மிஸ்சாகி வாய்ப்பு கிடைக்கிறதே என) ஏமாற்றமாக இருக்கும். அதற்காக வருத்தப்பட்டு கொண்டு இருப்பது நியாயம் அல்ல.

தீவிரமான உழைப்பு

தீவிரமான உழைப்பு

ஏனென்றால் நான் பல முறை ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் எப்போதும் போல் தீவிரமாக உழைக்க விரும்புகிறேன். அணிக்கு வெற்றியை தேடி தர விரும்புகிறேன். கடினமாக உழைக்கும் போது, அதற்கான மாற்றங்கள் உடனே நிகழாது. அப்படி நடக்கும் சமயத்தில் முன்பை விட அதிகமாக உழைக்க வேண்டும். சரியான அணுகுமுறையும் தேவை.

அடிப்படை நோக்கி நகரனும்

அடிப்படை நோக்கி நகரனும்

நாம் பலமுறை சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்திருப்போம். ரசிகர்கள் நம் சாதனைகளை கொண்டாடி இருப்பார்கள். அந்த சாதனைகள் நம் கண்ணை மறைக்கும். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதால், ஆட்டத்துக்கு தயாராகும் முறை நமக்கு தேவைப்பட்டு இருக்காது. . அதற்காக தான் மீண்டும் அடிப்படை நோக்கி நாம் நகர வேண்டும். எந்த பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

90 நிமிட பயிற்சி

90 நிமிட பயிற்சி

சில சமயம், நம் மனதில் எந்த பந்தை எப்படி அடித்தால் சரியாக இருக்கும் என்பதை விட, அப்படி எல்லாம் அடித்தால் தவறு நிகழ்ந்து விடுமோ என்று தான் யோசிக்க தோன்றும். இதனால் இன்றைய ஆட்டத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். 90 நிமிடம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன். எந்த பந்தை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவு நேற்றைய பயிற்சியின் போது கிடைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் ஆட முடிந்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli Latest interview on his back to Performance ஃபார்ம்க்கு திரும்பியது எப்படி? கோலி கூறிய ரகசியம்.. 90 நிமிட பயிற்சி குறித்து விளக்கம்
Story first published: Friday, May 20, 2022, 10:56 [IST]
Other articles published on May 20, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X