இந்தியா -ஆஸ்திரேலியா தொடர் : பலமாக உள்ள துவக்க ஆட்டக்காரர்கள்

மும்பை : ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோதும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை துவங்க உள்ளது.

இதில் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் பலமாக உள்ளதால் தான் கீழ் வரிசையில் விளையாட தயாராக உள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியாவுடன் இந்த ஆண்டின் முதல் ஒருநாள் போட்டிகளில் நாளை முதல் விளையாட உள்ளது. இதையொட்டி விராட் கோலி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஆண்டின் முதல் ஒருநாள் போட்டிகள்

ஆண்டின் முதல் ஒருநாள் போட்டிகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் நாளை துவங்கி 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்திய அணி குறித்து பெருமிதம்

இந்திய அணி குறித்து பெருமிதம்

இந்நிலையில் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி அணியின் வரிசை மிக சிறப்பாக உள்ளதாகவும், துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

கே.எல்.ராகுல் சிறப்பு

கே.எல்.ராகுல் சிறப்பு

காயம் காரணமாக சில போட்டிகளில் ஷிகர் தவான் விளையாடாமல் இருந்த நிலையில், துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட கே.எல். ராகுல், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். ரோகித் ஷர்மா இல்லாத நிலையிலும் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.

விராட் கோலி உறுதி

விராட் கோலி உறுதி

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் கே.எல். ராகுல் மூவருக்கும் விளையாட சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

எந்த கூட்டணி சிறப்பானது?

எந்த கூட்டணி சிறப்பானது?

இந்திய அணியின் துவக்க வீரர்கள் நல்ல பார்மில் உள்ளதாகவும் நல்ல பார்மில் உள்ள வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள விராட் கோலி, இதில் எந்த கூட்டணி சிறப்பாக இருக்கும் என்பதை சோதித்தறிய வேண்டும் என்றும் கூறினார்.

விராட் கோலி அறிவிப்பு

விராட் கோலி அறிவிப்பு

குறிப்பிட்ட இடத்தில்தான் விளையாட வேண்டும் என்ற எந்த விருப்பமும் தனக்கு இல்லை என்றும் எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் கீழ் வரிசையில் விளையாடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட வீரர்களை உருவாக்க முயற்சி

அடுத்த கட்ட வீரர்களை உருவாக்க முயற்சி

கேப்டனாக தனது பணி சிறப்பான வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது மட்டுமின்றி அடுத்த கட்ட வீரர்களை உருவாக்குவதும் தான் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

6வது இடத்தில் விளையாடிய கோலி

6வது இடத்தில் விளையாடிய கோலி

நடந்து முடிந்துள்ள இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் 3வது மற்றும் இறுதி ஆட்டத்தின்போது 3வது வீரராக சஞ்சு சாம்சனை களமிறக்கிய கோலி, மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிறகு 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli may go down the batting order in Australia ODI Series
Story first published: Monday, January 13, 2020, 18:29 [IST]
Other articles published on Jan 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X