For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. டெஸ்ட் தொடரில் 4வது சதம்.. 86 வருட சாதனையை ஊதித் தள்ளிய கோஹ்லி!

By Veera Kumar

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பதிவு செய்த நான்காவது சதம் இதுவாகும்.

சிட்னியில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில், டாசில் வெற்றி பெற்ற ஆஸி. முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 572 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், 2வதாக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. ஓப்பனிங்கில் இறங்கிய முரளி விஜய் டக் அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

4வது சதம்

4வது சதம்

இதனிடையே கேப்டன் விராட் கோஹ்லியும் அதிரடியாக விளையாடி சதத்தை கடந்துள்ளார். அவர் இந்த தொடரில் அடித்துள்ள நான்காவது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை சுனில் கவாஸ்கருக்கு மட்டுமே இருந்து வந்தது.

86 வருட சாதனை சமன்

86 வருட சாதனை சமன்

சுனில் கவாஸ்கர், 1971 மற்றும் 1978-79ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த போட்டிகளில் இந்த சாதனையை செய்திருந்தார். அதன்பிறகு இப்போது விராட் கோஹ்லி அந்த சாதனையை சமன் செய்துள்ளார். அதே நேரம் ஆஸ்திரேலிய மண்ணில் 86 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஒரே டெஸ்ட் தொடரில் 4 செஞ்சுரிகள் அடித்துள்ளார்.

முதல் டெஸ்டிலும் சதம்

முதல் டெஸ்டிலும் சதம்

மேலும், கேப்டன் என்ற வகையில் விராட் கோஹ்லிக்கு இது ஹாட்ரிக் செஞ்சுரியாகும். ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக டோணி களமிறங்காததால், தற்காலிக கேப்டனாக இந்திய அணியை கோஹ்லி வழிநடத்தினார். அந்த போட்டியின் இரு இன்னிங்சுகளிலும் கோஹ்லி சதம் அடித்திருந்தார்.

கேப்டனாக ஹாட்ரிக்

கேப்டனாக ஹாட்ரிக்

2வது மற்றும் மூன்றாவது போட்டிகளை டோணி தலைமையில் இந்தியா எதிர்கொண்டது. டோணி திடீரென ஓய்வு முடிவை அறிவித்துவிட்டதால் 4வது டெஸ்ட் போட்டிக்கு கோஹ்லி கேப்டனாக்கப்பட்டார். கேப்டனாகிய பிறகு பேட்டிங் செய்த முதல் இன்னிங்சிலே, சதம் அடித்துள்ளார். எனவே கேப்டனாக கோஹ்லி விளாசிய ஹாட்ரிக் செஞ்சுரி இதுவாகும்.

மானம் காத்தால் சரி

மானம் காத்தால் சரி

எப்படியோ... இந்திய அணியின் மானத்தை இந்த ஒரு பேட்ஸ்மேனாவது காப்பாற்றி வருகிறாரே.. அதுவரை சந்தோஷம்.. மகிழ்ச்சி.

Story first published: Thursday, January 8, 2015, 12:20 [IST]
Other articles published on Jan 8, 2015
English summary
Indian skipper Virat Kohli became only the second Indian to score four centuries in an overseas series. The only other Indian batsman to do so was Sunil Gavaskar, who did it in 1971 and 1978-79.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X