For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி உடல் நலம் பற்றி பொய்.. சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணி..மருத்துவமனை சென்றது இதற்கு தானா

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பிசிசிஐ மறைத்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெய்ஸ்டர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.

இது அநியாயத்தின் உச்சம்.. இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?இது அநியாயத்தின் உச்சம்.. இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இன்ப சுற்றுலா

இன்ப சுற்றுலா

இந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு செல்வோம். ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக தோற்ற பெங்களுரு அணி தொடரை விட்டு வெளியேறியது. அப்போது மனம் உடைந்த விராட் கோலி மனைவி மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்றார். அப்போது கடற்கரையில் அமர்ந்தவாறு கோலி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.

மருத்துவமனை விசிட்

மருத்துவமனை விசிட்

விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து ஒரு சின்ன பிரேக் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அறிவுறுத்திய நிலையில், விராட் கோலிக்கு இந்த விடுமுறை புத்துணர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், மும்பை வந்த விராட் கோலி நேரடியாக மருத்துவமனைக்கு சென்று செக் கப் செய்து கொண்டார்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

ஏதற்கு இந்த மருத்துவமனை விசிட் என்றும் கூறப்படாத நிலையில், அவர் வழக்கம் போல் தற்போது இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று பயிற்சியை தொடங்கிவிட்டார். இந்த நிலையில், விராட் கோலிக்கு மாலத்தீவில் இருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அதற்காக தான் இந்தியா வந்ததும் மருத்துவமனை சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

உண்மையை மறைத்தது யார்?

உண்மையை மறைத்தது யார்?

தற்போது கொரோனா தொற்றிலிருந்த குணமடைந்துவிட்டதால் விராட் கோலி இங்கிலாந்தில் தற்போது சகஜமாக சென்று வருகிறார். திமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை பிசிசிஐக்கு கோலி மறைத்தாரா, இல்லை பிசிசிஐ ரசிகர்களுக்கு மறைத்து விட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதே போன்று இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டும் நிலையில், தீவிர பயோ பபுள் விதிகள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது.

Story first published: Wednesday, June 22, 2022, 15:08 [IST]
Other articles published on Jun 22, 2022
English summary
Virat kohli suffered and recovered from corona – Reports விராட் கோலி உடல் நலம் பற்றி பொய்.. சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணி..மருத்துவமனை சென்றது இதற்கு தானா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X