For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றியுடன் தொடரை முடிப்போம்.. இதை சரி செய்தாலே போதும்.. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கருத்து

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வென்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

எனினும் பேட்டிங்கில் அவர் தன்னுடைய முழு திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் வாஷிங்டன் சுந்தர் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 மாற்றம்.. ரோகித் பதில் யார்? வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 மாற்றம்.. ரோகித் பதில் யார்?

எதற்கும் தயார்

எதற்கும் தயார்

கடந்த ஆட்டம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நான் எந்த சூழ்நிலையிலும் களமிறங்கி விளையாடக்கூடிய வீரராக திகழ விரும்புகிறேன். அணி என்னை எந்த இடத்தில் களமிறங்க சொல்கிறார்களோ அந்த இடத்தில் விளையாடு விரும்புகிறேன். ஆட்டத்தில் வெற்றி பெற அணிக்கு என்ன தேவையோ அதை எல்லாம் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

முயற்சி

முயற்சி

கடந்த சில ஆண்டுகளாக நான் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்ய வேண்டும் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். பினிஷிங் ரோலுக்கு என்ன தேவையோ அதனை நோக்கி கவனம் செலுத்தி வருகிறேன். நான் மேற்கொண்ட கடின உழைப்பு தற்போது பிரதிபலித்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் அது தொடரும். என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி அணிக்காக போட்டிகளை வென்று தர வேண்டும்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

உலகக்கோப்பை இந்திய அணிக்காக வெல்ல வேண்டும். என்னுடைய ஆட்டத்தில் எந்தெந்த இடத்தில் எல்லாம் முன்னேற்றம் தேவையோ, அதற்காக தொடர்ந்து விளையாடுவேன். வங்கதேச தொடரை பொறுத்தவரை எங்களுக்கு முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்பு கிடைத்திருந்தது. முதல் ஆட்டத்தில் கூடுதலாக 50 ரன்கள் அடித்திருந்தால் வென்று இருப்போம், இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்டுகள் விரைவில் எடுத்து விட்டோம். எனினும் அதன் பிறகு நாங்கள் சொதப்பி விட்டோம்.

வாய்ப்பு

வாய்ப்பு

இப்படி முக்கியமான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டால் எங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும். தொடரை வெற்றியுடன் முடிக்க முயற்சி செய்வோம். வங்கதேச அணி அவர்கள் சொந்த மண்ணில் பலமான அணியாக விளங்குகிறார்கள். அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் தான் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.டி20 உலக கோப்பையில் கூட அவர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள்.எனக்கு கிடைக்கும் அனைத்து போட்டியையும் நான் வாய்ப்பாக தான் கருதுகிறேன்.

முக்கியம்

முக்கியம்

உலக கோப்பைக்கு முன்பு நாங்கள் அதிக போட்டிகளில் விளையாட வில்லை. எனவே அனைத்து போட்டியும் முக்கியம் தான். நாங்கள் புதுவிதமான கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்கிறோம். எங்கள் முழு திறனை வெளிப்படுத்தி, எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறோம்ம் இந்த உத்வேகத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய உழைத்து வருகிறோம் என்று வாஷிங்டன் சுந்தர் கூறினார்.

Story first published: Friday, December 9, 2022, 20:32 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
Washington sundar believes they will finish the bangladesh series on very high
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X