For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை

மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று 18 ஆண்டுகள் ஆவதால் எப்படியாவது இம்முறை தொடரை கைப்பற்ற வேண்டிய முயற்சியில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு பெரிய ஆபத்தாக காத்திருப்பது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் .

அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிகம்.

இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை! இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!

ஆஸி.யின் ஐடியா

ஆஸி.யின் ஐடியா

அஸ்வின் கிட்டத்தட்ட 200 விக்கெட்டுகளுக்கு மேல் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக அஸ்வினை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதாவது பரோடாவை சேர்ந்த மகேஷ் பித்யா என்ற பந்துவீச்சாளரை ஆஸ்திரேலியா அணி பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. அவர் அஸ்வினின் ஜெராக்ஸ் போல் பந்து வீசுவதால் அவர் எதிர்கொள்வது மூலம் அஸ்வினை சமாளிக்க முடியும் என ஆஸ்திரேலிய வீரர்கள் யோசித்துள்ளனர்.

வசீம் ஜாபர் கிண்டல்

வசீம் ஜாபர் கிண்டல்

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வசீம் ஜாஃபர் ஆஸ்திரேலிய அணியை பங்கமாக கலாய்த்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி வீரர்களின் மண்டைக்குள் அஸ்வின் போய்விட்டதாக கேலி செய்துள்ளார். அதாவது அஸ்வினை நினைத்து ஆஸி வீரர்கள் பயப்படுகிறார்கள் என்பதை மறைமுகமாக கிண்டல் செய்து வசிம் ஜாபர் ட்வீட் போட்டுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை

பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை

இந்திய அணி வீரர்களுக்கும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். அதில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனவே தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு போட்டியில்லாவது விளையாடி அவர்கள் தங்களுடைய ஃபார்மை மீட்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் சரி. சிவப்பு நிற பந்து போட்டியில் விளையாடியிருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும். இல்லையென்றால் நீங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது தடுமாற வாய்ப்பு இருப்பதாக வசீம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

எனினும் இந்திய வீரர்களின் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடும் படி பலரின் கோரிக்கையை நிராகரித்த இந்திய வீரர்கள் தற்போது நாக்பூரில் மையமிட்டு பயிற்சி செய்து வருகிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன் என அனைவரும் தீவிரமாக ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகி வருகிறார்கள். இதில் சுப்மன் கில் போன்ற வீரர்கள் எவ்வித ஓய்வும் இன்று நேரடியாக பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை

பார்டர் கவாஸ்கர் கோப்பை

இதுவரை கடைசியாக நடைபெற்ற மூன்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையை இந்திய அணியே வென்று இருக்கிறது. இந்த தொடரில் மட்டும் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 4, 2023, 15:33 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Wasim jaffer trolls australia by ashwin already entered his head
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X