For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி கேபிடல்ஸ் அணி எல்லா தளத்துலயும் சிறப்பா இருக்கு.. யூஏஇ பிட்ச்ல சிறப்பா விளையாடலாம் -ஷிகர்

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக விளங்கி வருகிறார் ஷிகர் தவான்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக யூஏஇயில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அனைத்து தளங்களிலும் சிறப்பாக உள்ளதாகவும் யூஏஇயின் பிட்ச்களில் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்சில் களமிறங்கிய அடுத்த சிங்கம்... பயிற்சியை துவக்கிய ரபடா டெல்லி கேபிடல்சில் களமிறங்கிய அடுத்த சிங்கம்... பயிற்சியை துவக்கிய ரபடா

அபுதாபியில் முதல் போட்டி

அபுதாபியில் முதல் போட்டி

ஐபிஎல் போட்டிகள் நாளை அபுதாபியில் துவங்கவுள்ளது. துவக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் களமிறங்கி ஆடவுள்ளனர். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் அணியின் அனைத்து தளங்களும் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான வலிமை

சிறப்பான வலிமை

அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், விக்கெட்டுகள் மிகவும் மெதுவாகவே விழும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அணியின் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் அமித், மற்றும் அக்ஸர் ஆகியோர் சிறப்பாக உதவ முடியும் என்று அவர் கூறியுள்ளார். அவர்களின் அனுபவம் அணிக்கு சிறப்பான வலிமையை அளிக்கும் என்றும் கூறினார்.

ஆலோசனை பெற ஸ்ரேயாஸ் தயாராக வேண்டும்

ஆலோசனை பெற ஸ்ரேயாஸ் தயாராக வேண்டும்

அதிகமான அனுபத்துடன் இந்த சீசனில் டெல்லி கேபிடல்சில் இணைந்துள்ள அஸ்வின் அணிக்கு மட்டுமின்றி கேப்டனுக்கும் சிறப்பாக உதவ முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனியர்கள் மற்றும் ஜூனியர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தயாராக இருந்தால் அவர் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என்றும் ஷிகர் கூறினார்.

சிறப்பாக கைகொடுக்கும்

சிறப்பாக கைகொடுக்கும்

தங்களது அணியின் பேட்டிங், பௌலிங் உள்ளிட்ட அனைத்து தளங்களும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் யூஏஇயின் பிட்ச்களில் விளையாட இது சிறப்பாக கைகொடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த 2014ல் பாதி போட்டிகள் யூஏஇயில் நடைபெற்ற நிலையில், 200க்கும் மேற்பட்ட ரன்கள் இருமுறை மட்டுமே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 18, 2020, 20:40 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
During the course of the season, wickets will turn and get slower -Shikar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X