For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பவுலர்கள்.. ம்ஹூம்.. ஒரு பிரயோஜனமும் இல்ல… சொதப்பியது தான் மிச்சம்.. புலம்பிய டான் ரோகித்

மும்பை:அணியில் 6 பந்துவீச்சாளர்கள் இருந்தும் சொதப்பியதால் தான் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்று போனோம் என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா புலம்பி தள்ளியிருக்கிறார்.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.பிருத்வி ஷா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பிறகு, தவானுடன், கோலின் இங்க்ராம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ரன் வேகமும் சீராக உயர்ந்தது. 2வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் இங்க்ராம் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பண்ட் அதிரடி

பண்ட் அதிரடி

ரிஷப் பண்ட் வந்தார். 5 பந்துகளை அடக்கி வாசித்த அவர் அதன்பிறகு பொங்கி எழுந்து அதிரடியை வெளிப்படுத்தினார். தவான் 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும், பண்ட் தொடர்ந்து பட்டையை கிளப்பினார்.

அரைசதம் விளாசல்

அரைசதம் விளாசல்

அடித்தால் பவுண்டரி அல்லது இல்லையா சிக்சர் என ஒரு முடிவோடு அவர் விளையாடியது ஆட்டத்திலேயே தெரிந்தது. சிக்சர் மற்றும் பவுண்டரிகளிலேயே ரன்களை குவித்தார். வெறும் 18 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார்.

213 ரன்கள் குவிப்பு

213 ரன்கள் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் உட்பட 78 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 288.89 ஆகும்.

தொடக்கம் தடுமாற்றம்

தொடக்கம் தடுமாற்றம்

214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், குயின்டான் டி காக் , பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா என எல்லாரும் பெவிலியன் திரும்பினர்.

யுவி. அரைசதம்

யுவி. அரைசதம்

இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது. மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பழக்கமான ஒன்று

பழக்கமான ஒன்று

தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் ,முதல் போட்டி தோல்வி எங்களுக்கு பழகிய ஒன்று. முதல் 10 ஓவர்கள் எங்கள் கையில் இருந்தது. அதன் பிறகு, பண்ட் ஆட்டத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மிகுந்த வருத்தம்

மிகுந்த வருத்தம்

அணியில் 6 பவுலர்கள் உள்ளனர். ஆனாலும் சொந்த மண்ணில் எதிரணியினர் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது மிகுந்த வருத்தம். அடுத்த போட்டியில் அசத்துவோம் என்றார்.

Story first published: Monday, March 25, 2019, 11:28 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
We made a lot of mistakes says mumbai captain rohit after ipl match against delhi capitals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X