For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. கிரிக்கெட் அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. தெ.ஆப்பிரிக்காவை தொடர்ந்து மே.தீவுகளிடமும் தோல்வி

By Veera Kumar

செயின்ட் கிட்ஸ்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற ஆஸ்திரேலியாவுக்கு இது அடுத்த அடியாகும்.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 98, ஸ்மித் 74, ஜார்ஜ் பெய்லி 55 ரன்கள் எடுத்தனர்.

West Indies beat Australia by four wickets

இதனையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணி 45.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

சாமுவேல்ஸ் 92, சார்லஸ் 48 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் சம்பா, கோல்ட்டர் நைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த முத்தரப்பு போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் 2 போட்டிகளில் வென்றுள்ளன.

தென் ஆப்பிரிக்கா இதுவரை 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 14, 2016, 8:41 [IST]
Other articles published on Jun 14, 2016
English summary
West Indies beat Australia by four wickets. Chasing 266 for the win, West Indies enjoyed a strong start before slowing down in the middle. However, they always had the momentum on their side on a small ground with Marlon Samuels scoring 92 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X