For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை மோதலுக்கு முன் ரோஹித், சர்ப்ராஸ் சொல்வது என்ன?

துபாய் : ஆசிய கோப்பை தொடர் இன்று முதல் நடைபெற இருக்கிறது. ஆறு நாடுகள் பங்கேற்க உள்ள இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணி என்ன செய்யப் போகின்றன? பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்குமா? இந்தியா பாகிஸ்தான் மோதலில் வெல்லப்போவது யார்?

வலுவிழந்து இருக்கும் வங்கதேசம், இலங்கை எப்படி சமாளிக்கப் போகின்றன? என பல கேள்விகளுக்கு மத்தியில் அனைத்து நாடுகளின் கேப்டன்கள் நேற்று பேட்டி அளித்தனர்

ரோஹித் சர்மா சொல்வது என்ன?

ரோஹித் சர்மா சொல்வது என்ன?

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், "எல்லா அணிகளின் மனதிலும் உலகக்கோப்பை தான் இருக்கிறது. ஆசிய கோப்பை அதற்கான சரியான முன்னோட்டமாக இருக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆஞ்சலோ மாத்யூஸ், சர்ப்ராஸ், மஷ்ராபே எல்லாம் என்ன திட்டம் செய்கிறார்கள், அவர்களின் பலம், பலவீனம் எல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த தொடர் நடக்கும் போது அதை எல்லாம் புரிந்து கொள்ள முடியும். உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது. அதற்கான திட்டத்தை இங்கே முயற்சி செய்து பார்க்கலாம்" என கூறினார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்

"பாகிஸ்தான் உலகக்கோப்பை வரை பல தொடர்களில் ஆட உள்ளது. நாங்கள் இப்போதைக்கு ஆசிய கோப்பையில் கவனம் செலுத்துவோம். அடுத்து ஒவ்வொரு தொடராக அணுகி, உலககோப்பைக்கு செல்வோம். எங்கள் அணி எங்கே நிற்கிறது என எங்களுக்கு ஒரு யோசனை இருக்கிறது" என மிகவும் நம்பிக்கையோடு நேர்மறையாக பேசினார் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ். இந்தியா, இந்த பாகிஸ்தான் கேப்டனிடம் கவனமாக இருக்க வேண்டும். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவிடம் இருந்து தட்டிச் சென்றது.

மற்ற கேப்டன்கள் சொல்வது என்ன?

மற்ற கேப்டன்கள் சொல்வது என்ன?

ஆஞ்சலோ கூறும்போது நிதாஸ் தொடரில் வங்கதேசத்துக்கும், இலங்கைக்கும் சில சர்ச்சைகள் எழுந்தது பற்றி குறிப்பிட்டார். " பழையதை மறந்துவிடுவோம். இங்கே நல்ல கிரிக்கெட் ஆடுவதில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும். ஒரு போட்டியில் தோற்றாலும், வெளியே சென்று விடுவோம்" என கூறினார். ஆப்கன் மற்றும் ஹாங்காங் கேப்டன்கள் மற்ற அணிகளை அச்சுறுத்த முயல்வோம் என கூறினர்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்

இந்தியா பாகிஸ்தான் மோதல்

இந்தியா, பாகிஸ்தான் மோதல் பற்றி ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அவர், "பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவது உற்சாகமாக இருக்கும். ஆனால், அது ஒரு போட்டி மட்டுமே. இங்கே நாங்கள் தொடர் முழுவதும் ஆடுவதில் கவனம் செலுத்துவோம்" என கூறினார். இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது.

Story first published: Saturday, September 15, 2018, 10:40 [IST]
Other articles published on Sep 15, 2018
English summary
What captain Rohit sharma and Sarfraz Ahmed saying before the clash?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X