For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு வந்த கண்டம்.. ஜிம்பாப்வேவுடன் வென்றால் என்ன? தோற்றால் என்ன?.. புள்ளிப்பட்டியல் விவரம்

மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இன்று இந்திய அணி தோற்றாலும், வென்றாலும் பெரிய குழப்பத்தை ஏற்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

குரூப் பி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி ஏற்கனவே 6 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. எந்த அணியும் தகுதிபெறாமல் இருந்த சூழலில் இதனை இன்று காலை தென்னாப்பிரிக்கா உறுதி செய்தது.

“அதைவிட்டால் வேற வழியில்ல” ஜிம்பாப்வே போட்டிக்கான ப்ளேயிங் 11ல் தேர்வில் பயந்த ரோகித்..என்ன காரணம் “அதைவிட்டால் வேற வழியில்ல” ஜிம்பாப்வே போட்டிக்கான ப்ளேயிங் 11ல் தேர்வில் பயந்த ரோகித்..என்ன காரணம்

செமி ஃபைனல் ரேஸ்

செமி ஃபைனல் ரேஸ்

அதாவது குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் மோசமாக தோற்றது. இந்த தோல்வியால் வெறும் 5 புள்ளிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. மற்றொருபுறம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும்.

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணி ஏற்கனவே தகுதிப்பெற்றுவிட்ட போதும், ஜிம்பாப்வே போட்டி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி முதலிடத்தை உறுதி செய்யும். குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும் உள்ளது. அரையிறுதியை பொறுத்தவரையில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள அணியும், குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ள அணியும் மோதும், மற்ற இரண்டு அணிகளும் மோதும்.

விதிமுறை என்ன

விதிமுறை என்ன

எனவே இந்திய அணி முதலிடத்தை உறுதி செய்துவிட்டால், குரூப் ஏவில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் மோதலாம். இங்கிலாந்து அணி சற்று சொதப்பி வருவதால், அதனை வீழ்த்துவதற்கும் சற்று சுலபமாக இருக்கும். இதுவே இந்திய அணி தோல்வியடைந்துவிட்டால் கதை மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்திய அணி தோல்வியடைந்து, வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்தி வந்துவிட்டால், இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்லும்.

ரன்ரேட் சிக்கல்

ரன்ரேட் சிக்கல்

ஆனால் இரண்டுமே ஒரே புள்ளிகளுடன் இருப்பதால் ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் கொடுக்கப்படும். அதன்படி பார்த்தால் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிக ரன்ரேட்டுடன் உள்ளது. இப்படி ஒருவேளை நடந்துவிட்டால், அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாக் அவுட்களில் நியூசிலாந்திடம் இந்தியா எப்போதுமே சொதப்புவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 6, 2022, 12:54 [IST]
Other articles published on Nov 6, 2022
English summary
What will happen if Team India won against zimbabwe or Lose against zimbabwe match of T20 world cup 2022, here is the Semi final scenario
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X