For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வித, விதமான பேட்டுகளை தோனி பயன்படுத்துவது ஏன்? வெளிவந்த அந்த தகவல்... கண் கலங்கும் ரசிகர்கள்

Recommended Video

Dhoni Bat Secret: தோனி ஒரு ருபாய் கூட வாங்கவில்லை.. நன்றி மறக்காத தல..நெகிழும் ரசிகர்கள்!- வீடியோ

லண்டன்: தான் ஓய்வு பெறுவதை சூசகமாக சொல்வதற்கே தோனி 3 வகையாக பேட்டுகளை உலக கோப்பையில் பயன்படுத்திய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில், தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. உலக கோப்பையில் அவரது பேட்டிங் திறமை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. வழக்கமான ஆட்டம் வெளிப்பட தவறிய நிலையில் இந்த தகவல்கள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதற்கு கட்டியம் கூறும் வகையில், தோனியின் நெருங்கிய நண்பர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடப்பு உலக கோப்பையில் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டியே, சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர் கருத்தை வெளியிட்டு இருந்தார்.

கலங்கும் ரசிகர்கள்

கலங்கும் ரசிகர்கள்

இதுபோன்ற கருத்துகள் வெளி வந்த நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரும், மேலாளருமான அருண் பாண்டே கூறிய செய்தி ரசிகர்களை கதி கலங்க வைத்துள்ளது. சமீப காலமாக பேட்டிங்கின் போது நடுநடுவே தோனி பேட்களை மாற்றி விளையாடுவதே, விரைவில் ஓய்வு பெற உள்ளேன் என்பதற்கான சிக்னல் என்று அவர் கூறியிருக்கிறார்.

வியாபாரக்குறிகள்

வியாபாரக்குறிகள்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை எஸ்ஜி, வாம்பையர் வியாபாரக் குறிகள் கொண்ட பேட்களுடன் ஆரம்பித்தார். தோனி பரந்த உள்ளம் கொண்டவர்.

பல லோகோ

பல லோகோ

போட்டிகளின் போது பல நிறுவனங்களின் லோகோ பதித்த பேட்டுகளை கொண்டு விளையாடுவதன் மூலம், தமக்கு உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அடிக்கடி பேட்டுகளை மாற்றி, மாற்றி ஆடினார். பேட் பயன்படுத்தும் விளம்பரத்திற்காக எந்தவித பணத்தையும் இது வரை தோனி பெறவில்லை.

கிரிக்கெட்டின் கடைசி

கிரிக்கெட்டின் கடைசி

பின்னர் ரீபாக், ஸ்பார்ட்டன் என பல்வேறு முன்னனி நிறுவன குறியீடு கொண்ட பேட்களுடன் அவர் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் உள்ள தோனி தான் விரும்பி விளையாடிய பேட்களுக்கும், அதனை தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்க பேட்களை மாற்றி விளையாடினார் என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, July 5, 2019, 20:02 [IST]
Other articles published on Jul 5, 2019
English summary
Why dhoni used so many bats during matches?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X