For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நீங்க வேண்டாம்.. செட்டாக மாட்டீங்க".. சாஸ்திரி சொன்னபடி செய்த சஞ்சு.. கடும் ஆக்சன் எடுத்த கோலி!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டிகளுக்கு அறிவிக்கப்பட இருக்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.முக்கியமாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் பல இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

தோனிதான் 2 பெயரை கொடுத்தாரு.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே நிர்வாகி.. இப்படி ஒரு டிவிஸ்டா? தோனிதான் 2 பெயரை கொடுத்தாரு.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே நிர்வாகி.. இப்படி ஒரு டிவிஸ்டா?

ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் அணிக்குள் வந்தனர். ஆனால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது .

எப்படி

எப்படி

இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் தனக்கு வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அதிரடியாக ஆடுகிறேன் என்று கேட்ச் கொடுத்து இவர் அவுட்டானார். ரன் ரேட்டை உயர்த்துகிறேன் என்று இவர் அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழந்தார்.

பேட்டி

பேட்டி

அதோடு, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொல்லித்தான் இப்படி அதிரடியாக ஆடினேன் என்றும் சஞ்சு சாம்சன் விளக்கம் கொடுத்தார். இவர் கொடுத்த பேட்டி ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 போட்டியில் மிடில் ஆர்டரில் இவர் களமிறங்கி ஆடினார். ஆனால் மிடில் ஆர்டரில் இவர் களமிறங்கி அதிக ரன்கள் எடுக்கவில்லை.

வேகம்

வேகம்

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் சொன்னபடிதான் நான் நடந்தேன் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். நான் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும் என்று கூறினார்கள். விக்கெட் பற்றி கவலை வேண்டாம். சிக்ஸ் பவுண்டரி அடியுங்கள்.ரன் ரேட்டை உயர்த்துவதுதான் உங்கள் நோக்கம். அதிரடி காட்டுங்கள் என்று கூறினார்கள்.

விளக்கம்

விளக்கம்

அதனால் அப்படி ஆடினேன், என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். இப்படி சாஸ்திரி மீதும் அணி நிர்வாகம் மீதும் இவர் பழியை போட்டது பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் தற்போது சஞ்சு சாம்சன் மொத்தமாக அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

எல்லா திட்டமும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருடையது என்று சஞ்சு சாம்சன் கூறியதுதான் இவரின் நீக்கத்திற்கு காரணம் என்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தற்போது எழுந்துள்ளது.

Story first published: Sunday, February 21, 2021, 10:50 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
Why Kerala batsman Sanju Samson not included in Team India T20 squad against England?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X