For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரவு 2.30 மணி.. கைது செய்யப்பட்ட ரெய்னா.. முன்னணி நடிகை உட்பட 34 பேர்.. பரபர கிளப் ரெய்டு பின்னணி!

சிட்னி: இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

மும்பையில் இருக்கும் பிரபலமான கிளப்களில் ஒன்று டிராகன்பிளை கிளப். மும்பையின் அந்தேரி பகுதியில் இருக்கும் ஜேடபுள்யூ மரியாட் ஹோட்டலில் இந்த கிளப் அமைந்துள்ளது.

இந்த கிளப் இரவு நேர பார்ட்டிகளுக்கு பிரபலம். மும்பையில் கொரோனா காலத்திற்கு முன் பல பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இங்கு வருவது வழக்கம்.

மும்பை கிளப்பில் நடந்த சம்பவம்.. கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.. என்ன நடந்தது? மும்பை கிளப்பில் நடந்த சம்பவம்.. கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.. என்ன நடந்தது?

கொரோனா

கொரோனா

தற்போது கொரோனா காரணமாக மும்பையில் இருக்கும் பெரும்பாலான கிளப்கள் மூடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஒரு கிளப் மட்டும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இயங்கி வந்தது. இரவு 10 மணி வரை மட்டுமே தனி நபர் இடைவெளியோடு இயங்க இந்த கிளப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று

நேற்று

இந்த நிலையில் நேற்று இந்த கிளப்பிற்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள், பாலிவுட் நடிகை சுசானி கான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளனர். நேற்று இரவு 2.30 மணி வரை இவர்கள் அந்த கிளப்பில் இருந்துள்ளனர்.

மது

மது

அதிக அளவு மது, போதை பொருட்கள் உட்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் இரவு 2.30 மணி வரை சத்தமாக பாடல் போட்டு ஆடி உள்ளனர். இதனால் அருகில் இருந்த வீடுகளிடம் இருந்து போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் அங்கு ரெய்டு வந்தது.

ரெய்டு

ரெய்டு

போலீஸ்க்கு கிடைத்த தகவல்கள் மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டு நடத்தப்பட்ட போதுதான் அங்கு ரெய்னா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரெய்னா உட்பட அங்கு இருந்த 34 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் டெல்லியை சேர்ந்த "சிலர்'' விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

ரெய்னா மற்றும் அவரின் நண்பர் இரண்டு பேரும் பெயிலில் விடுவிக்கப்பட்டனர். இன்னும் சிலர் விடுவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட போது ரெய்னா கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கைது

கைது

இந்த கிளப்பிற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளப் ஊழியர்கள் 7 பேர் இன்னும் ஜெயிலில் உள்ளனர். இந்த கிளப் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது.

Story first published: Tuesday, December 22, 2020, 17:36 [IST]
Other articles published on Dec 22, 2020
English summary
Why Suresh Raina arrested in famous Mumbai club in the mid night?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X