For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தில் பறி போன பார்மை ஜிம்பாப்வேயில் மீட்டெடுக்குமா ஆஸ்திரேலியா?

ஹராரே: இங்கிலாந்து தொடரில் மறக்க முடியாத தோல்வியுடன் திரும்பிய ஆஸ்திரேலியா தற்போது பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே வந்துள்ளது.

ஹராரேவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நாளை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, டி20 தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

வாய்ப்பை பயன்படுத்துமா ஆஸி

வாய்ப்பை பயன்படுத்துமா ஆஸி

இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டித்தொடராகவே இருக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு நல்ல வாய்ப்பாக இது வந்து சேர்ந்துள்ளது.

பாகிஸ்தான் வலுவான நிலையில்

பாகிஸ்தான் வலுவான நிலையில்

பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 8 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் 200+ ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரிவில் ஆஸ்திரேலியா

சரிவில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி கடைசியாக இங்கிலாந்து தொடரில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது (5 ஒருநாள் மற்றும் ஒரு டி20). ஆனால் டி20 போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியா சற்றே வலுவான அணியாக உள்ளது. அதற்கு சான்று அந்த அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருப்பதே ஆகும் .

ஆஸி.யை அச்சுறுத்தும் ஸ்பின்

ஆஸி.யை அச்சுறுத்தும் ஸ்பின்

ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங், சுழல் பந்துவீச்சை சமாளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர்களது பெரும்பாலான விக்கெட்கள் மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் ஷதாப் கான்

அச்சுறுத்தும் ஷதாப் கான்

பாகிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் , ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் அந்த அணி தரவரிசையில் முன்னேறி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு செல்ல போராடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Story first published: Monday, July 2, 2018, 10:52 [IST]
Other articles published on Jul 2, 2018
English summary
Australia will meet Pakistan in its first T20 match in the tri series in Harare.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X