நியூசிலாந்தின் சாதனையை இந்தியா முறியடிக்குமா?

Posted By: Staff

டெல்லி: நியூசிலாந்து அணியுடனான ஒருதினப் போட்டித் தொடரை வென்றதெல்லாம் தற்போது ஒரு மேட்டரே கிடையாது. விஞ்ஞானிகளே வியக்கும் அளவுக்கு ஆலோசனைகளை வழங்கும் தமிழக அமைச்சர்களைப் போல, கிரிக்கெட் நாடுகள் நடுங்கக் கூடிய நியூசிலாந்து அணியுடனான டி-20 போட்டித் தொடர் தான், இந்திய அணிக்கு உண்மையான டெஸ்ட் ஆகும்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. முதல் ஒரு தினப் போட்டியில் நியூசிலாந்து வென்றாலும், இந்திய அணி மற்ற இரண்டிலும் வென்று தொடரை வென்றது. இதன் மூலம், உள்நாட்டில் நியூசிலாந்து அணியிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைத்தோம்.

ஆனால், கடைசி ஒருதினப் போட்டியில், 337 ரன்கள் இந்தியா எடுத்திருந்தபோதும், அதை நெருங்கி வந்து கிலி ஏற்படுத்தியது நியூசிலாந்து. இந்தத் தொடரில் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என்று அனைத்திலும் இந்தியா கலக்கியபோதும், சமபலம் உள்ள அணியை வென்றது மகிழ்ச்சியே.

டி-20 தொடர் நாளை துவக்கம்

டி-20 தொடர் நாளை துவக்கம்

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடர் டெல்லியில் நாளை துவங்குகிறது. இந்தத் தொடர் மிகவும் சவாலாகவே இருக்கும் என்பதை கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உணர்ந்திருக்கும்.

 5 முறையும் வெற்றி

5 முறையும் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் இதுவரை இந்தியா வென்றதில்லை என்பது வரலாறு. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேரடியாக மோதியுள்ளன. அதில் அனைத்திலும் நியூசிலாந்து அணியே வென்றுள்ளது.

சவால்விட்ட நியூசிலாந்து

சவால்விட்ட நியூசிலாந்து

கடந்த, 2007ல் நடந்த முதல் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது அனைத்து நாடுகளையும் வென்றது. ஆனால், நியூசிலாந்து எதிராக மட்டும் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து நம்பர் 1

நியூசிலாந்து நம்பர் 1

தற்போது ஐசிசி தரவரிசையில், டெஸ்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, ஒருதினப் போட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டி-20 தரவரிசையில் நியூசிலாந்து உள்ள முதலிடத்தைப் பிடிக்க எந்த நாட்டு அணியாலும் தற்போதைக்கு முடியாது. இந்தியா இதில் 5வது இடத்தில் உள்ளது.

சாதனையை முறியடிக்க வாய்ப்பு

சாதனையை முறியடிக்க வாய்ப்பு

புள்ளி விபரங்களை வைத்து கோலம் போடும் அளவுக்கு தற்போது இந்திய அணி முன்னேறியுள்ளது. இதற்கு முன் இந்தியா, நியூசிலாந்து இடையே நடந்துள்ள இரண்டு டி-20 தொடர்களிலும் நியூசிலாந்தே வென்றுள்ளது. டி-20 போட்டியில் நியூசிலாந்துடன் முதல் வெற்றியுடன், தொடர் வெற்றிக்கான முயற்சியில் இந்திய அணி ஈடுபடும் என்று எதிர்பார்க்கலாம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி விவரம்:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி விவரம்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். டோணி, ஹார்திக் பாண்டியா, அக்சார் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, முகம்மது சிராஜ்.

Story first published: Tuesday, October 31, 2017, 16:30 [IST]
Other articles published on Oct 31, 2017
Please Wait while comments are loading...