ஐபிஎல்லில் கலக்கும் தமிழர்கள்: பெங்களூருவை வீழ்த்தியது தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி

Posted By:
3வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச முடிவு

கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 11ல் மூன்றாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின. இதில் புதிய கேப்டனான தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி, கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடியில் வென்றது.

முதல் போட்டியே, இந்த சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று நடந்த சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸை வென்றார் தினேஷ்

டாஸை வென்றார் தினேஷ்

முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிய அஸ்வின் முதல் ஆட்டத்திலேயே வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோஹ்லி கேப்டனாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸை வென்ற தினேஷ் கார்த்திக் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடியது.

ரன் குவிப்பில் வேகம்

ரன் குவிப்பில் வேகம்

பிரண்டன் மெக்கல்லாம், குயின்டான் டி காக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். 1.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 18ஆக இருக்கும் போது, 4 ரன்கள் எடுத்திருந்த காக் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, மெக்கல்லாம் மற்றும் கேப்டன் விராட் கோஹ்லி அதிரடியில் இறங்கினர். குறிப்பாக மெக்கல்லாம் பவுண்டரிகளாக சேர்த்தார். அவர் 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசினார். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

கலக்கினார் டிவில்லியர்ஸ்

கலக்கினார் டிவில்லியர்ஸ்

அதன்பிறகு கேப்டன் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். நேற்றைய போட்டியிலி பிராவோ செய்ததைப் போல அதிரடியாக ரன்கள் குவித்தார் டிவில்லியர்ஸ். அவர் 23 பந்துகளில், ஒரு பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 44 ரன்கள் குவித்தபோது ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர், 14.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள்.

கடைசியில் கலக்கிய மன்தீப் சிங்

கடைசியில் கலக்கிய மன்தீப் சிங்

டில்லியர்ஸை தொடர்ந்து கோஹ்லி 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சர்பாஸ் கான் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மன்தீப் சிங், 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்தார்.

கோல்கத்தாவுக்கு இமாலய இலக்கு

கோல்கத்தாவுக்கு இமாலய இலக்கு

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடந்த சீசனில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த சுனில் நரேன், அதிரடியாக விளையாடி, 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இன்றைய போட்டியில் தமிழர்களான அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் வெற்றி வாகை சூடியுள்ளன.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
kkr win the toss in the ipl match and asked rcb to bat first
Story first published: Sunday, April 8, 2018, 20:20 [IST]
Other articles published on Apr 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற