இன்னும் இரண்டு வருஷம்தான்.. அதுக்கப்பறம் விளையாட முடியுமான்னு தெரியல.. கலங்கும் யுவராஜ் சிங்

Posted By:
ஒய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்

சென்னை: கிரிக்கெட் உலகில் இன்னும் இரண்டு வருடம்தான் இருக்க முடியும் என்று யுவராஜ் சிங் வருத்தப்பட்டு இருக்கிறார். முக்கியமாக ஐபிஎல் போட்டியில் இரண்டு வருடங்களுக்கு மேல் விளையாடுவது கஷ்டம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

சில நாட்கள் முன்புதான் கஷ்டமான யோ யோ டெஸ்டில் யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அதில் மிகவும் சிறப்பாக செயலாற்றி அவர் தனது பிட்னஸை நிரூபித்தார்.

இந்த நிலையில் தற்போது எதிர்கால திட்டம் என்ன என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். கிரிக்கெட்டுக்குப் பின் என்ன செய்வேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கொஞ்சம் அதிக போட்டிகள்

கொஞ்சம் அதிக போட்டிகள்

இவர் தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நிறைவாகவே ஆடி இருப்பதாகக் கூறியுள்ளார். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதைப் பெருமையாக நினைக்கிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் கூட 2014க்குப்பின் அதிக போட்டிகள் விளையாடி இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எப்போது ஓய்வு

எப்போது ஓய்வு

தான் ஓய்வு அடையும் நாள் குறித்தும் பேசியுள்ளார். அதில் "எனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது. இனி எந்த மாதிரியான கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேன் என்று தெரியவில்லை. 2019க்கு பின் ஓய்வு குறித்து அறிவித்துவிடுவேன். அதற்கு மேல் விளையாடுவது சந்தேகம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல்

ஐபிஎல்

அதேபோல் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றுள்ளார். அதில் ''இப்போது நிறையத் திறமையான ஆல்ரவுண்டர்கள் வந்துவிட்டார்கள். அதிகபட்சம் 2 வருடம்தான் இன்னும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியும்.'' என்றுள்ளார். இந்த ஐபிஎல் போட்டியில் இவருக்கு 2 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இவர் எதிர்கால திட்டம் குறித்தும் முடிவெடுத்துள்ளார். அதன்படி 'யூ வி கேன்' அமைப்பின் மூலம் நாடு முழுவதும் கேன்சருக்கு எதிராகப் பேச போகிறேன் என்றுள்ளார். ஒவ்வொரு பகுதி மக்களையும் சென்று சந்தித்துப் பேச போகிறேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Thursday, February 15, 2018, 15:40 [IST]
Other articles published on Feb 15, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற