For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்!

ஜெய்ப்பூர் : இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் என்ற வேகப் பந்துவீச்சாளர் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார்.

ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பாராட்ட, அது வேறொரு பிரச்சனையாக மாறியது. அப்படி என்ன பிரச்சனை?

வாய்ப்பு கடினம்

வாய்ப்பு கடினம்

ஜோப்ரா ஆர்ச்சர் வேறு நாட்டை சேர்ந்தவர். வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்றால், அந்த நாட்டில் சில ஆண்டுகள் தங்கி இருந்த பின்னரே வாய்ப்பு கிடைக்கும்.

பல்வேறு அணிகள்

பல்வேறு அணிகள்

அந்த வகையில் பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் உள்ளூர் கவுன்டி அணிகளிலும், பல்வேறு நாடுகளின் உள்ளூர் டி20 அணிகளிலும் ஆர்ச்சர் ஆடி வருகிறார். தற்போது உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல்-இல் சிறப்பாக பந்து வீசி அசத்தி இருந்தார். இந்த நிலையில், ஆர்ச்சர் இங்கிலாந்து தேசிய அணியில் பெரும் போராட்டத்துக்குப் பின் இடம் பெற்றதை பாராட்டி ட்வீட் போட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அங்கே இருந்து தான் தொடங்கியது பிரச்சனை.

பாராட்டு பதிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பதிவில், "எங்கள் வேகப் பந்துவீச்சு மெஷின் உலகக்கோப்பைக்கு செல்கிறது" என குறிப்பிட்டு இருந்தது. இதை இங்கிலாந்து கவுன்டி அணியான சசக்ஸ் அணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சசக்ஸ் சண்டை

காரணம், அந்த அணியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடி வருகிறார். இதனால், சசக்ஸ் அணி, "உங்கள் வேகப் பந்துவீச்சு மெஷினா?" என கேள்வி கேட்டு ஆர்ச்சருக்கு உரிமை கொண்டாடியது. அடடே..!! என நாம் இந்த சண்டையை ரசிப்பதற்குள், இன்னொரு அணியும் கோதாவில் இறங்கியது.

மூன்றாவது அணி

அந்த அணி ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் டி20 தொடரின் ஹோபார்ட் ஹரிகேன்ஸ். அந்த அணியிலும் ஆடி வருகிறார் ஜோப்ரா ஆர்ச்சர். அந்த அணி தனது பதிவில் ராஜஸ்தான் - சசக்ஸ் சண்டையை ரசித்து, சிரிப்பது போன்ற "ஈமோஜி"யை பதிவிட்டது.

ஜோப்ரா ஆர்ச்சர் பதிவு

இப்படி தான் இடம் பெற்ற அணிகள் சண்டை போட்டுக் கொள்வதை கண்ட ஜோப்ரா ஆர்ச்சர்.. "போய் ஒழுங்கா விளையாடுங்கப்பா" என கமென்ட் போட்டு, தலையில் அடித்துக் கொண்டார். நல்லவேளையாக இங்கிலாந்து அணியும் இந்த சண்டையில் இறங்கவில்லை.

Story first published: Thursday, May 23, 2019, 11:30 [IST]
Other articles published on May 23, 2019
English summary
World cup 2019 : Rajasthan Royals, Sussex, Hobart Hurricanes fighting for Jofra Archer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X