For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை சொல்லிச் சொல்லி அடிக்கும் யுவராஜ் சிங்!

மிர்பூர்: சந்தித்த நான்கு போட்டிகளையும் சிறப்பாக வென்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ள இந்தியா, இந்த முறை கட்டாயம் உலகக் கோப்பையை வென்று விடும் என்ற பெருத்த நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரரை வைத்து பிரமாதமாக ஆட்டம் காட்டி வரும் இந்தியா, முழுமையான ஒரு டீமாக ஆடி வருவதையே இந்த நான்கு தொடர் வெற்றிகளும் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக முதல் டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் கலக்கிய யுவராஜ் சிங் மீண்டும் பார்முக்குத் திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸி.யை சொல்லி அடிச்ச யுவராஜ்

ஆஸி.யை சொல்லி அடிச்ச யுவராஜ்

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் யுவராஜ் சிங் நேற்று கலக்கிய விதத்தில் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.

2000வது ஆண்டில்

2000வது ஆண்டில்

இப்படித்தான் 2000மாவது ஆண்டு நடந்த ஐசிசி நாக் அவுட் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்திருந்தார் யுவராஜ் சிங். அப்போட்டியில், 84 ரன்களை அவர் குவித்தார். அப்போது அவருக்கு வயது 18தான்.

2007ல் மறுபடியும் அதிரடி

2007ல் மறுபடியும் அதிரடி

அதேபோல 2007ல் நடந்த முதலாது உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டியின் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்து 38 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து இந்தியா இறுதிக்குள் நுழைய வழி வகுத்தார்.

2011ல்

2011ல்

பின்னர் 2011ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியா அரை இறுதிக்குள் நுழைய உதவினார்.

நேற்று 60

நேற்று 60

நேற்றும் ஆஸ்திரேலியாவை சமாளித்து அவர்களைத் திணறடித்த யுவராஜ் சிங் 43 பந்துகளில் 60 ரன்களைக் குவித்து இந்தியாவன் வெற்றியை உறுதி செய்தார்.

கஷ்டமான நிலையில் வந்து

கஷ்டமான நிலையில் வந்து

இந்தியா 2 விக்கெட்களை இழந்து 44 ரன்களுடன் தவித்துக் கொண்டிருந்தபோது களம் இறங்கினார் யுவராஜ் சிங். ஆரம்பத்தில் நிதானமாகத்தான் ஆடினார். பின்னர் போகப் போக விஸ்வரூபம் எடுத்தார்.

டோணியுடன் சேர்ந்ததும்

டோணியுடன் சேர்ந்ததும்

டோணி வந்ததும் அவருக்கு டோணியுடன் இணைந்து கலக்கிய பழைய நினைவுகள் வந்ததோ என்னவோ பிரமாதமாக ஆடத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து கலக்கி விட்டனர்.

Story first published: Monday, March 31, 2014, 18:35 [IST]
Other articles published on Mar 31, 2014
English summary
There is something about facing Australia in major events that gets Yuvraj Singh excited. The explosive Indian southpaw burst on the scene scoring 84 as an 18-year-old in Nairobi against them in the ICC Knock Out Trophy in 2000. He then scored 70 in 38 balls to turn around the semifinal of the inaugural edition of the ICC World T20 at the Kingsmead, in Durban, in September 2007. And then, when all seemed lost in the quarterfinal of the 2011 World Cup clash at Motera, he came in and belted 57 not out off 65 balls to take the team through.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X