For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 வருடத்திற்கு முன் நடந்த அதே சம்பவம்.. ஜூஸ் குடிக்கும் கேப்பில்..முகமது ஷமியிடம் கோலி கூறிய ப்ளான்!

சவுத்தாம்டன்: ஜூஸ் குடிக்கும் நேரத்தில் முகமது ஷமியிடம் கேப்டன் விராட் கோலி கூறியது என்னவாக இருக்கும் என்ற பேசுப்பொருள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சூடுபிடித்துள்ளது.

 WTC Final: திடீரென ஓய்ந்த மழை.. அடுத்த 6 நிமிடத்தில்.. நிம்மதியுடன் எடுத்த நடவடிக்கைகளுக்கு WTC Final: திடீரென ஓய்ந்த மழை.. அடுத்த 6 நிமிடத்தில்.. நிம்மதியுடன் எடுத்த நடவடிக்கைகளுக்கு

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி தொடக்கத்தில் வலுவாக இருந்த நிலையில் தற்போது பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

விக்கெட் எடுக்க திணறல்

விக்கெட் எடுக்க திணறல்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களை எடுத்துள்ளது. இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்தின் அனுபவ வீரர்களான கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் தொடக்கம் முதலே அச்சுறுத்தல் கொடுத்து வந்த நிலையில் முகமது ஷமி அதற்கு முடிவு கட்டினார்.

ரசிகர்களின் குழப்பம்

ரசிகர்களின் குழப்பம்

நீண்ட நேரமாக விக்கெட் கிடைக்காமல் இருந்து வந்த சூழலில், முகமது ஷமி அடுத்தடுத்து 2 விக்கெட்களை எடுத்துக்கொடுத்து நம்பிக்கை கொடுத்துள்ளார். அவர் வீசிய பந்தில் ட்ரைவ் ஷாட் அடிக்க முயன்ற ராஸ் டெய்லர் அனைத்து பந்துகளையும் உடலின் மீதே வீசினார் முகமது ஷமி, இதன் பலனாக, அவர் டிரைவ் ஷாட் ஆட முற்பட்டு கேட்ச் ஆனார். இந்த கேட்ச்சை இளம் வீரர் சுப்மன் கில் சூப்பர் டைவினால் பிடித்து அசத்தினார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதே போல அடுத்த ஓவரிலேயே நியூசிலாந்து பேட்ஸ்மேன் வாட்லிங்கை ஒரு ரன்னுக்கு க்ளீன் பௌல்ட்டாக்கி வெளியேற்றினார். இவ்வளவு பெரிய திருப்புமுணை விராட் கோலியுடனான சிறிய பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான் நடைபெற்றது. இந்திய அணிக்கு விக்கெட்டே கிடைக்காத போது, ட்ரிங்ஸ் ப்ரேக் விடப்பட்டது. அப்போது முகமது ஷமியிடம் விராட் கோலி புதிய திட்டம் ஏதோ ஒன்றை கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த முதல் பந்திலேயே முகமது ஷமி விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் விராட் கோலி என்ன கூறினார் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

புதிய வீடியோ

புதிய வீடியோ

இதுமட்டுமல்லாமல் வாட்லிங் விக்கெட்டை முகமது ஷமி எடுத்தது குறித்து புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிஜே வாட்லிங்கை க்ளீன் பௌல்ட்டாக்கி ஷமி வெளியேற்றினார். தற்போது அச்சு அசலாக அதே போன்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நடைபெற்றுள்ளது. இதனை ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Tuesday, June 22, 2021, 20:22 [IST]
Other articles published on Jun 22, 2021
English summary
Fans sharing the Video of Mohammed shami's Clean boult wicket against Watling in WTC Final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X