For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க மூணு பேரும் தான் இந்திய டெஸ்ட் அணியின் பலம்.. 2018இல் சாதனை செய்த கூட்டணி

மும்பை : இந்திய அணி டெஸ்ட்டில் நம்பர் 1 அணியாக வலம் வருகிறது. இந்த ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பெரியளவில் சறுக்கினாலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் பின்னடைவுக்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே காரணம். பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அதிலும் இந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்களே இந்திய அணியின் பலமாக இருந்து வருகின்றனர்.

மூவர் கூட்டணி ஆதிக்கம்

மூவர் கூட்டணி ஆதிக்கம்

இந்திய டெஸ்ட் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா வேகப் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தனித்துவமாக பந்துவீசும் பும்ரா, மூத்த வீரர் இஷாந்த் சர்மா, சாதிக்கத் துடிக்கும் ஷமி ஆகிய மூவரும் 2018இல் டெஸ்டில் மட்டும் 136 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் மூவர் கூட்டணி

வெஸ்ட் இண்டீஸ் மூவர் கூட்டணி

இந்த மூவர் கூட்டணி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சில் இருந்த மூவர் கூட்டணியான ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் மால்கம் மார்ஷல் 1984இல் கூட்டணியாக எடுத்த 130 விக்கெட்கள் என்ற எண்ணிக்கையை உடைத்துள்ளது இந்தியாவின் இந்த புதிய மூவர் கூட்டணி.

பும்ரா கலக்கல்

பும்ரா கலக்கல்

பும்ரா இந்த ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அறிமுகமான முதல் ஆண்டிலேயே இந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். பும்ரா இந்த ஆண்டில் 9 போட்டிகளில் 48 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

ஷமி, இஷாந்த் அசத்தல்

ஷமி, இஷாந்த் அசத்தல்

அடுத்து ஷமி 12 போட்டிகளில் 47 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மா 11 போட்டிகளில் 41 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மா முன் எப்போதும் இல்லாத அளவு கட்டுக் கோப்பாக பந்து வீசி வருகிறார். ஷமி தன் திறனை பல மடங்கு உயர்த்திக் கொண்டுள்ளார்.

சிறந்த பந்துவீச்சு குழு

சிறந்த பந்துவீச்சு குழு

இவர்கள் மூவரும் ஒரே போட்டியில் ஆடுவதன் பலனை ஆஸ்திரேலியாவில் கண்கூடாக பார்த்தாகி விட்டது. இவர்களுடன் ஒரு அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவர் மட்டும் இணையும் பட்சத்தில், இதுவே தற்போதைய சிறந்த பந்துவீச்சு குழுவாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

Story first published: Monday, December 31, 2018, 15:31 [IST]
Other articles published on Dec 31, 2018
English summary
Year ender 2018 - India’s test victory success lies with this three bowlers. Best trio of Pace bowlers in the history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X