For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2018இல் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி? மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் மழை.. அப்ப மத்தவங்க?

மும்பை : 2018இல் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய வீரர்களே அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளனர்.

கோலி, ரோஹித், தவான் ஆகியோர் மிக சிறப்பாக பேட்டிங் செய்து ரன் மழை பொழிந்தனர். முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் எத்தனை ரன்கள் அடித்தனர் என பார்க்கலாம்.

[2018 பிளாஷ் பேக்]

2018 சிறப்பான ஆண்டு

2018 சிறப்பான ஆண்டு

2018 இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டு என்று தான் கூற வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும், டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அதே போல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளை குவித்தது. இதற்கு இந்திய பந்துவீச்சு தான் முக்கிய காரணம்.

மூன்று முக்கிய வீரர்கள்

மூன்று முக்கிய வீரர்கள்

பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியா சில வீரர்களை நம்பியே இருந்தது. டெஸ்டில் கோலி, புஜாரா, ஒருநாள் போட்டிகளில் ரோஹித், தவான், கோலி, டி20 போட்டிகளில் ரோஹித், தவான் என மூன்று - நான்கு வீரர்களே பேட்டிங்கில் இந்திய அணியை காப்பாற்றினார்கள்.

டெஸ்டில் அதிகம் யார்?

டெஸ்டில் அதிகம் யார்?

டெஸ்ட்டில் கோலி 13 போட்டிகளில் 1322 ரன்கள் குவித்து 2018இல் அதிக ரன் குவித்த டெஸ்ட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய அளவிலும் இவரே டெஸ்டில் முதல் இடம். கோலி ஐந்து சதம், ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.

புஜாரா, ரஹானே ரன்கள்

புஜாரா, ரஹானே ரன்கள்

டெஸ்டில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் புஜாரா 837 ரன்களுடன் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் ரஹானே 12 போட்டிகளில் 644 ரன்களும், ரிஷப் பண்ட் 8 போட்டிகளில் 537 ரன்களும் எடுத்துள்ளனர். 12 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ராகுல் வெறும் 468 ரன்கள் மட்டுமே எடுத்து படு மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் போட்டிகளில் முதல் இடம்

ஒருநாள் போட்டிகளில் முதல் இடம்

ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் முதல் இரண்டு இடங்களில் கோலி, ரோஹித் இருக்கின்றனர். தவான் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் மூவரும் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் ரன்கள் எத்தனை?

ஒருநாள் போட்டிகளில் ரன்கள் எத்தனை?

கோலி 14 இன்னிங்க்ஸ்களில் 1202 ரன்கள், ரோஹித் 19 இன்னிங்க்ஸ்களில் 1030 ரன்கள், தவான் 19 இன்னிங்க்ஸ்களில் 897 ரன்கள் எடுத்துள்ளனர். 10 இன்னிங்க்ஸ் மட்டுமே களமிறங்க வாய்ப்பு பெற்ற அம்பதி ராயுடு 392 ரன்கள் எடுத்து நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

தோனி மோசம்

தோனி மோசம்

தோனி ஒருநாள் போட்டிகளில் தன் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். 20 இன்னிங்க்ஸ்களில் 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 25 மட்டுமே. இந்திய ஒருநாள் போட்டிகளில் கோலி, ரோஹித், தவான் மூவர் மட்டுமே பெரும்பாலான ரன்களை அடித்துள்ளனர்.

டி20 போட்டிகளில் தவான்

டி20 போட்டிகளில் தவான்

டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் ஷிகர் தவான் முதல் இடத்தை பிடித்துள்ளார். 17 இன்னிங்க்ஸ்களில் 689 ரன்கள் அடித்துள்ளார் தவான். அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் 18 இன்னிங்க்ஸ்களில் 590 ரன்கள் அடித்துள்ளார்.

ராகுல் அதிக ரன்கள் எப்படி?

ராகுல் அதிக ரன்கள் எப்படி?

இந்திய அளவில் இவர்கள் இருவரும் முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் ராகுல் இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சரியாக ஆடாத ராகுல், டி20 போட்டிகளில் அடித்த ஒரு சதம் மற்றும் அரைசதத்தை வைத்து தன் சராசரியை உயர்த்திக் கொண்டார். 11 இன்னிங்க்ஸ்களில் 324 ரன்கள் அடித்துள்ளார் ராகுல்.

நம்பிக்கை நாயகன் தினேஷ் கார்த்திக்

நம்பிக்கை நாயகன் தினேஷ் கார்த்திக்

இந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்தவரை ரோஹித், தவான், கோலி ஆகியோரை தாண்டி இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில போட்டிகளிலேயே வாய்ப்பு பெற்றனர். அப்படி பெற்ற வாய்ப்புகளில் அணிக்காக ஆடிய பேட்ஸ்மேன்கள் யார் என்றால் நிச்சயம் தினேஷ் கார்த்திக் அதில் இடம் பெறுவார்.

ஜாதவ், ராயுடு அசத்தல்

ஜாதவ், ராயுடு அசத்தல்

கடைசி நேரங்களில் களமிறங்கி சொற்ப ரன்கள் அடித்தாலும், அணியின் வெற்றிக்காக பொறுப்பாக ஆடினார் தினேஷ் கார்த்திக். ஒருநாள் போட்டிகளில் கேதார் ஜாதவ் மற்றும் அம்பதி ராயுடுவும் மிடில் ஆர்டரில் சரியான பங்களிப்பை அளித்தனர்.

ஏமாற்றமளித்த பேட்ஸ்மேன்கள்

ஏமாற்றமளித்த பேட்ஸ்மேன்கள்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஏமாற்றமளித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலிட்டால் அது பெரிய பட்டியலாக இருக்கும். மனிஷ் பாண்டே, ராகுல், தோனி, ஹர்திக் பண்டியா மற்றும் சில போட்டிகள் மட்டுமே வாய்ப்பு பெற்ற பல வீரர்களும் இதில் அடங்குவர்.

Story first published: Monday, December 31, 2018, 19:00 [IST]
Other articles published on Dec 31, 2018
English summary
Year ender 2018 : Top Indian run scorers in tests, ODI and T20 in 2018. Kohli tops in test and ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X