For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் சாதனை! முடிஞ்சா தொட்டுப் பாரு!! தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக ரன்கள் அடித்த கோலி

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கடந்த 2016, 2017இல் அதிக சர்வதேச ரன்கள் அடித்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்த கோலி, இந்த ஆண்டும் முதல் இடம் பிடித்து கிரிக்கெட் உலகை ஆட்சி செய்து வருகிறார்.

மூன்று ஆண்டுகள் முதல் இடம்

மூன்று ஆண்டுகள் முதல் இடம்

கோலி கடந்த மூன்று ஆண்டுகளாகவே தன் பேட்டிங் பாணியிலும், உடற்தகுதி செயல்பாடுகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் விளைவாக அவரது திறனும் பல மடங்கு முன்னேறியுள்ளது. அதன் வெளிப்பாடாகவே தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிக ரன்கள் அடிப்பதில் முதல் இடத்தை பிடித்து அசத்தி வருகிறார்.

2018இல் கலக்கிய கோலி

2018இல் கலக்கிய கோலி

2018ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 2735 ரன்கள் அடித்துள்ளார் கோலி. இதில் 11 சதங்களும், 9 அரைசதங்களும் அடங்கும். இந்த ஆண்டு கோலி சில தொடர்களில் ஓய்வில் இருந்தார். ஒருவேளை அந்த போட்டிகளிலும் அவர் பங்கேற்று இருந்தால் இன்னும் கூட அதிக ரன்களை எட்டியிருக்க முடியும்.

டெஸ்டில் உச்சகட்ட பார்ம்

டெஸ்டில் உச்சகட்ட பார்ம்

டெஸ்ட் போட்டிகளில் கோலி இந்த ஆண்டில் உச்சகட்ட பார்மில் இருந்தார். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா என ஆடிய அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் கோலி பொறுப்பாக ஆடினார்.

டெஸ்டில் எத்தனை ரன்கள்?

டெஸ்டில் எத்தனை ரன்கள்?

டெஸ்டில் 13 போட்டிகளில் 24 இன்னிங்க்ஸ் ஆடினார். அதில் 1322 ரன்கள் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு மட்டும் 5 சதம் மற்றும் 5 அரைசதம் அடித்துள்ளார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஃபோர் அடித்தவரும் கோலி தான். 144 ஃபோர்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் பேட்டிங் சராசரி 55.08 ஆகும்.

தொட முடியாத உயரத்தில் கோலி

தொட முடியாத உயரத்தில் கோலி

ஒருநாள் போட்டிகளில் கோலி தொட முடியாத ஒரு உச்சத்தில் இருக்கிறார். காரணம், 14 போட்டிகளில் ஆடிய கோலி 1202 ரன்கள் அடித்துள்ளார். இதன் சராசரி 133.55 ஆகும். 2018இல் 20 போட்டிகளுக்கு மேல் ஆடிய பலரால் கூட கோலி 14 போட்டிகளில் அடித்த ரன்களை எட்ட முடியவில்லை. கோலி ஒருநாள் போட்டிகளில் 2018ஆம் ஆண்டு 6 சதம், 3 அரைசதம் அடித்துள்ளார்.

டி20யில் தாக்கம் இல்லை

டி20யில் தாக்கம் இல்லை

டி20 போட்டிகளில் கோலி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டு 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 211 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 30 ஆகும். பல முறை அணியின் வெற்றிக்காக பேட்டிங் ஆடினார்.

Story first published: Monday, December 31, 2018, 10:34 [IST]
Other articles published on Dec 31, 2018
English summary
Year ender 2018 : Virat Kohli is the highest run scorer in 2018, for the third consecutive year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X