For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தங்கமான பையன்".. கோலிக்கு பிறகு கேப்டன் "அவர்" தான் - ச்சும்மா அப்படி பாராட்டும் யுவராஜ் சிங்

மும்பை: விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் பதில் அளித்திருக்கிறார்.

Recommended Video

Yuvraj Singhன் Unlucky Test Career! Team India அவரை Miss பண்ணிட்டாங்களா? | OneIndia Tamil

இந்திய அணி கிரிக்கெட்டில், இந்த கேப்டன் என்ற கான்செப்ட் மிக சிக்கலானது.. மிக கடினமானது. மிக முக்கியமானது.. ஆனால், நின்னு சாதித்துவிட்டால் பேர் புகழ் கொட்டிவிடும்.

ஒலிம்பிக்கில் பங்குபெறுபவர்களின் முழு பட்டியல் வெளியானது.. தமிழர்கள் எத்தனை பேர்.. பிரிவுகள் என்ன? ஒலிம்பிக்கில் பங்குபெறுபவர்களின் முழு பட்டியல் வெளியானது.. தமிழர்கள் எத்தனை பேர்.. பிரிவுகள் என்ன?

கபில் தேவ், அசாருதீன், கங்குலி, டிராவிட், தோனி, கோலி என்று மிகப்பெரிய கேப்டன் இந்திய அணியை இத்தனை ஆண்டுகள் சுமந்து வந்திருக்கின்றனர். இன்னமும் சுமந்து கொண்டும் இருக்கின்றனர்.

தோனி வேற ரகம்

தோனி வேற ரகம்

குறிப்பாக, 2000 காலக்கட்ட தொடக்கத்தில் சச்சின் எனும் ஒற்றை ஆளுமையை நம்பியிருந்த இந்திய அணிக்கு, கங்குலி கேப்டனானது பொன்னான தருணம் எனலாம். இந்திய அணியில் அவர் விதைத்த விதைகள் ஏராளம். யுவராஜ் சிங், தோனி, ஜாகீர் கான், ஷேவாக் என்று அறிமுகம் செய்த வீரர்கள் நிறைய பேர் சூப்பர் ஸ்டார்ஸ்களாகிவிட்டனர். அதிலும், தோனி வேற ரகம் எனலாம்.

3 முத்தான கோப்பைகள்

3 முத்தான கோப்பைகள்

அவரது தலைமையிலான இந்திய அணி தான், கோப்பைகளை சீராக வெல்லத் தொடங்கியது. அதுநாள் வரை ஆஸ்திரேலியாவில் கோப்பை வெல்வது என்பதெல்லாம் கனவிலும் இந்திய அணி கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விஷயமாகும். ஆனால், 2008ல் CB சீரிஸை வென்றுக் கொடுத்து, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியை கோப்பை ஏந்த வைத்தார். அதுமட்டுமல்ல, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை உலகின் நம்பர்.1 அணியாக உயர்த்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என்று மூன்று முத்தான கோப்பைகளை இந்திய அணிக்கு வாங்கிக் கொடுத்தவர் தோனி.

முதல் ஆசிய கேப்டன்

முதல் ஆசிய கேப்டன்

2016ல் அவர் அனைத்து வித கேப்டன் பதவியில் இருந்தும் விலகி, ஒரு வீரராக அணியில் தொடர், பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விராட் கோலி. இவரது தலைமையில் இந்திய அணி முக்கிய ஐசிசி தொடர்களை வெல்லவில்லை என்றாலும், இவரது தலைமையில் தான் இந்திய அணி கடந்த ஐந்து ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல, 70 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் தொடரை வென்றுக் கொடுத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் ஆசிய கேப்டன் எனும் பெருமையும் கோலி வசம் தான் உள்ளது.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

இந்நிலையில், யுவராஜ் சிங், கோலிக்கு பிறகு யார் இந்திய அணியின் கேப்டனாக வரவேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அவர் யாரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் தெரியுமா? ரிஷப் பண்ட்.. ஆம்! பண்ட் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ""எதிர்காலத்தில் ரிஷாப்பை ஒரு திறமையான இந்திய கேப்டனாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் அவர் துறுதுறுவென இருக்கிறார். அதிகம் பேசுவார். ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டார். நம்பமுடியாத கேப்டன்சியை வெளிப்படுத்தினார். எனவே, வரும் ஆண்டுகளில் அவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக மக்கள் பார்க்க வேண்டும்" என்று யுவராஜ் டைம்ஸ் ஆஃப் இந்தியா.காமிடம் தெரிவித்தார்.

Story first published: Thursday, July 8, 2021, 22:12 [IST]
Other articles published on Jul 8, 2021
English summary
Yuvraj Singh names future India captain who - ரிஷப் பண்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X