For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அரசியல், சினிமால்லாம் ஒதுங்கு.. 2018இல் ட்விட்டரில் அதிக ரீட்வீட், லைக்கை அள்ளிய விளையாட்டு

நியூடெல்லி : 2018ஆம் ஆண்டில் இந்திய அளவில் ட்விட்டரில் அதிக ரீட்வீட் மற்றும் அதிக லைக் பெற்ற பதிவுகள் இரண்டுமே விளையாட்டுத் துறை சார்ந்தது என தெரிய வந்துள்ளது.

இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் இந்த பெருமையை தட்டிச் சென்ற இருவர்.

சினிமா, அரசியலை தாண்டி விளையாட்டும் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதிக ரீட்வீட் பெற்ற ட்வீட்

இந்தியா - கென்யா ஆடிய 2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை காண வருமாறு அழைத்து சுனில் சேத்ரி ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்தியாவில் கால்பந்து போட்டிகளை மக்கள் அதிகம் காண வரவில்லை என்ற நிலையில் அவரது பேச்சு மக்களின் இதயத்தை தொட்டது. சுமார் 60,000 பேர் இந்த பதிவை ரீட்வீட் செய்து சாதனை படைக்க வைத்தனர். இதுவே 2018இல் இந்தியாவில் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்.

விற்றுத் தீர்ந்த 7000 டிக்கெட்கள்

விற்றுத் தீர்ந்த 7000 டிக்கெட்கள்

இந்த வீடியோவின் தாக்கத்தால் இந்தியா - கென்யா போட்டியின் மொத்த டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. மும்பை ஃபுட்பால் அரீனாவில் சுமார் 7000 ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி வெற்றிகரமாக நடந்தது.

அதிக லைக் பெற்ற கோலி

கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் பௌர்ணமி நிலவில் கர்வா சௌத் என்கிற நிலவுப் பண்டிகையை கொண்டாடிய போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த பதிவு 2,15,000 லைக்களுக்கும் மேல் பெற்று இந்திய அளவில் 2018ஆம் ஆண்டில் அதிக லைக் பெற்ற பதிவாக மாறி உள்ளது.

தமிழ், தெலுங்கு தான் அதிகம்

தமிழ், தெலுங்கு தான் அதிகம்

இந்திய அளவில் முதல் பத்து ஹேஷ்டேக்-களில் ஏழு தமிழ் மற்றும் தெலுங்கு சார்ந்தவை. தமிழ் படங்களான சர்கார், விஸ்வாசம் (இன்னும் படம் வரலை!!), காலா ஆகியவையும், தெலுங்கு படங்களான பாரத் அனி நேனு, அரவிந்த சமேத, ரங்காஸ்தலம் ஆகியவையும், பிக் பாஸ் தெலுங்கு 2 என்ற நிகழ்ச்சியும் சேர்த்து ஏழு இடங்களை பிடித்துக் கொண்டன.

மற்ற விளையாட்டும் உண்டு

மற்ற விளையாட்டும் உண்டு

கிரிக்கெட் தவிர்த்து விளையாட்டில் ஏசியன் கேம்ஸ், பஜ்ரங் புனியா, ஹீமா தாஸ், பி.வி. சிந்து ஆகியோரும் அதிக முறை ட்ரென்டிங்கில் வந்தவர்கள்.

Story first published: Friday, December 7, 2018, 12:10 [IST]
Other articles published on Dec 7, 2018
English summary
2018’s Most retweeted tweet is Sunil Chhetri’s request to fill the stadium for football match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X