For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

யார் சாமி இவன்..? 92 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோ கீப்பர் சாதனை.. பொலாந்து கனவை தகர்த்த மெக்சிகோ

தோஹா : ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள மெக்சிகோ, 26வது இடத்தில் உள்ள போலாந்து பலப்பரீட்சை நடத்தியது.

இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதிய நிலையில், மெக்சிகோ, போலாந்து தலா 3 வெற்றியை பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் ரசிகர்களின் கவனம் எல்லாம் போலாந்து அணியில் விளையாடும் 36 வயதான பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவோண்டஸ்கி மீது தான் விழுந்தது.

poland vs mexico fifa wc

ஏனென்றால் இதுவரை 76 சர்வதேச கோல் அடித்துள்ள ராபர்ட் லெவோண்டஸ்கி. இதுவரை 5 உலக கோப்பை ஆட்டங்களில் விளையாடி ஒரு முறை கூட கோல் அடிக்கவில்லை. போலாந்து அணி, ராபர்ட் லெவோண்டஸ்கி தலைமையில், வியூகங்களை அமைத்து அதிரடி ஆட்டத்தை ஆடியது.

இதனை மெக்சிகோ வீரர்கள் லாவகமாக சமாளித்தனர். இதனால் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இந்த நிலையில், ஆட்டத்தின் பிற்பாதியில் 56வது நிமிடத்தில் போலாந்துக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது, இதனால் தமது முதல் உலக கோப்பை கோலை ராபர்ட் லெவோண்டஸ்கி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மெக்சிகோ கோல் கீப்பர் மெக்சிகோ கோல் கீப்பர் ஓச்சா அதனை தடுத்தார். இதன் மூலம் 1930 ஆம் ஆண்டுக்கு பிறகு பெனால்டி கிக் அடிக்கும் பந்தை தடுத்த முதல் கோல் கீப்பர் என்ற சாதனையை ஓச்சா படைத்தார். இதன் மூலம் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், போட்டி சமனில் முடிவடைந்தது.

Story first published: Wednesday, November 23, 2022, 1:28 [IST]
Other articles published on Nov 23, 2022
English summary
2022 FIFA world cup – Poland star player Robert Lewandowski denied a penalty goal by mexico யார் சாமி இவன்..? 92 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோ கீப்பர் சாதனை.. பொலாந்து கனவை தகர்த்த மெக்சிகோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X