வலிமையான அணிகள் மோதும் 55வது போட்டி... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 55வது போட்டி இன்றைய தினம் படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை சிட்டி எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகள் முதல்முறையாக இந்த தொடரில் மோதவுள்ளன.

இதையடுத்து இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இன்றயை போட்டி பரபரப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்று 55வது போட்டி

இன்று 55வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 55வது போட்டி இன்றைய தினம் கோவாவின் படோர்டாவில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஐஎஸ்எல் 2020 -21 புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை சிட்டி எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகள் மோதவுள்ளன.

2வது இடத்தில் மோஹுன் பகன்

2வது இடத்தில் மோஹுன் பகன்

தொடர்ந்து 4 போட்டிகளில் பெற்றுள்ள வெற்றியுடன் இந்த போட்டியில் மோஹுன் பகன் அணி களமிறங்கவுள்ளது. தடுப்பட்டத்தில் சிறப்பாக விளையாடிவரும் மோஹுன் பகன் 20 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மோஹுன் பகனுடன் மோதல்

மோஹுன் பகனுடன் மோதல்

இந்நிலையில் கோச் செர்பியா லோபெராவின் மும்பை சிட்டி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பெங்ளூரு அணியை 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தற்போது மோஹுன் பகன் அணியை எதிர்கொள்ளவுள்ளது மும்பை சிட்டி.

சமமான வெற்றிகள்

சமமான வெற்றிகள்

கடந்த 6 சீசன்களில் இதுவரை 14 முறைகள் இந்த இரு அணிகளும் மோதி தலா 5 வெற்றிகளை பெற்றுள்ளன. 4 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இந்நிலையில் இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக இன்றைய போட்டியில் மோதவுள்ளன. அதனால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
The upcoming encounter between the two sides will be their maiden clash this season
Story first published: Monday, January 11, 2021, 20:17 [IST]
Other articles published on Jan 11, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X