For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அப்செட்னா இதுதான்.. முடிவுக்கு வந்த பெல்ஜியம் ஆதிக்கம்.. களத்திலேயே கண்ணீர் சிந்திய லுகாகு!

தோஹா: குரோஷியா அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்ததால், கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட பெல்ஜியம் அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே குரூப்பில் உள்ள அணிகளில் யாருக்கும் சாதகம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் 4 அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் குரூப் எஃப் பிரிவில் உள்ள குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கும், கனடா - மொராக்கோ அணிகளுக்கும் ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரே ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்டது.

ஃபிபா உலகக்கோப்பை.. களமிறங்கும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா.. சவால் அளிக்குமா சவுதி அரேபியா?ஃபிபா உலகக்கோப்பை.. களமிறங்கும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா.. சவால் அளிக்குமா சவுதி அரேபியா?

குரோஷியா - பெல்ஜியம்

குரோஷியா - பெல்ஜியம்

ஆனால் பெல்ஜியம் அணி தங்களின் முந்தைய போட்டியில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் இருப்பதால், குரோஷியாவை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். சர்வதேச கால்பந்து தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்ததால், ரசிகர்களிடையே இந்த ஆட்டத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முதல் பாதி ஆட்டம்

முதல் பாதி ஆட்டம்

இதற்கேற்ப ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக 16வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது விஏஆர் தொழிற்நுட்பத்தால் சோதனை செய்தபோது, பென்லாடி வாய்ப்பு திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரோஷியா அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் மறுபக்கம் பெல்ஜியம் அணி தரப்பில் பெரிதாக அட்டாக் செய்யவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவுக்கு வந்தது.

பெல்ஜியம் அணிக்கு வாய்ப்பு

பெல்ஜியம் அணிக்கு வாய்ப்பு

தொடர்ந்து இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. குறிப்பாக 62வது நிமிடத்தில் எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்பை பெல்ஜியம் அணி வீரர் லுகாகு தவறவிட்டார். தொடர்ந்து 68வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை, மோட்ரிச் தவறவிட்டார்.

 லுகாகு தவறு

லுகாகு தவறு

தொடர்ந்து பெல்ஜியம் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. இதன் பலனாக 90வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க லுகாகுவுக்கு கிடைத்தது. ஆனால் அதிலும் கோல் அடிக்காமல் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இரண்டாம் பாதியில் 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் பெல்ஜியம் அணியின் அட்டாக்கை குரோஷியா வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். இறுதிவரை பெல்ஜியம் அணிக்கு ஒரு கோல் கூட கிடைக்கவில்லை. இறுதியாக ஆட்டம் கோலின்றி 0-0 என்ற நிலையில் முடிவடைந்தது.

 முடிவுக்கு வந்த ஆதிக்கம்

முடிவுக்கு வந்த ஆதிக்கம்

இதன் மூலம் பெல்ஜியம் அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஏற்பட்ட மிகப்பெரிய அப்செட்டாக இது பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் உலகக்கோப்பை, யூரோ என்று ஆதிக்கம் செலுத்தி வந்த பெல்ஜியம் அணி, இம்முறை குரூப் சுற்றோடு வெளியேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மூன்று முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்ட, லூகாகு மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.

Story first published: Thursday, December 1, 2022, 22:54 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
Belgium vs Croatia Match ended in a Goalless Draw. So Belgium knocked out as Croatia secure last 16 spot.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X