பிரேசிலியர்கள் பற்றி என்ன தெரியும்.. வரும் போட்டியில் எங்கள் நடனத்தை பாருங்கள்.. வினிசியஸ் பதிலடி!

தோஹா: பிரேசில் வீரர்களின் சாம்பா நடனம் குறித்த விமர்சனத்திற்கு அந்த அணியின் இளம் வீரர் வினிசியஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. இதற்காக பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜென்டினா, போர்ச்சுகல், மொராக்கொ, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த காலிறுதிப் போட்டியில் பிரேசில், பிரான்ஸ் அணிகள் நிச்சயம் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதனிடையே தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியின் போது பிரேசில் வீரர் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்மார் இல்லாத பிரேசில்.. உரசி பார்த்த சுவிட்சர்லாந்து.. கடைசி நேர கோல்.. யாருக்கு வெற்றி? நெய்மார் இல்லாத பிரேசில்.. உரசி பார்த்த சுவிட்சர்லாந்து.. கடைசி நேர கோல்.. யாருக்கு வெற்றி?

சாம்பா நடனம்

சாம்பா நடனம்

சாம்பா நடனக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிரேசில் வீரர்கள் மீது பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நடுகள வீரர் ராய், பிரேசில் வீரர்கள் நடவமாடியது அவமரியாதையை ஏற்படுத்தியதாக விமர்சித்தார். இவரது விமர்சனத்திற்கு பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

வினிசியஸ் பதிலடி

வினிசியஸ் பதிலடி

இதுகுறித்து வினிசியஸ் கூறுகையில், சில நேரம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது சில பேர் மட்டும் குற்றம்சாட்டுவார்கள். பிரேசில் மக்கள் கொண்டாட்டமான வாழ்க்கையை வாழக் கூடியவர்கள். அதனால் குற்றச்சாட்டுகளை பற்றி கவலையில்லை. உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் கோல் அடிப்பது அனைவருக்குமே முக்கிய தருணம். அதனால் அந்த தருணம் வீரர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டாட்டமான தருணம்.

கொண்டாட்டங்கள் ரெடி

கொண்டாட்டங்கள் ரெடி

அதுமட்டுமல்லாமல் நாங்கள் இன்னும் சில கொண்டாட்டங்களை மைதானத்தில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதனால் எங்கள் ஆட்டத்தில் கவனமாக இருந்து வருகிறோம். உலகக்கோப்பையில் ஒவ்வொரு வளர்ச்சியையும் கொண்டாடி மகிழ்கிறோம். அதேபோல் விளையாட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்குமே இருக்கிறது.

எங்களின் கனவு

எங்களின் கனவு

ஏனென்றால் எங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமான மக்கள் இருக்கின்றனர். தனிப்பட்ட முறையில் பிரேசிலுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே இருக்கிறது. ஒரு வீரராக இன்னும் நான் பக்குவப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். கால்பந்து விளையாட்டில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் குறை சொல்லக் கூடாது என்று தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS
English summary
Brazil's youth player Vinicius has hit back at criticism of Brazil's samba dance.
Story first published: Thursday, December 8, 2022, 16:56 [IST]
Other articles published on Dec 8, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X