உலகக்கோப்பையில் பிரேசிலை ஜெயிச்சிட்டோம்.. இதுவே எங்களுக்கு போதும்.. ஜெர்சியை சுழற்றிய கேமரூன் வீரர்!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையை கேமரூன் அணி படைத்துள்ளது

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளில் குரூப் ஜி பிரிவில் உள்ள பிரேசில் - கேமரூன் அணிகள் விளையாடியது.

பிரேசில் அணி இரு வெற்றிகளுடன் எற்கனவே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆனால் கேமரூன் அணி நாக் அவுட் சுற்று போட்டியில் நீடிக்க, பிரேசில் அணியை வீழ்த்த வேண்டிய நிலை இருந்தது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்! தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்!

முதல் பாதி ஆட்டம்

முதல் பாதி ஆட்டம்

இதற்கேற்ப முதல் பாதி ஆட்டத்தில் கேமரூன் அணி வீரர்கள் தொடக்கம் முதலே கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பிரேசில் அணி வீரர்கள் வழக்கம் போல் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் முதல் பாதி ஆட்டம் முழுக்கவே பிரேசில் அணியே அதிக நேரம் பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இருப்பினும் பிரேசில் அணியை கோல் அடிக்க விடாமல் கேமரூன் அணி தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

கேமரூன் கோட்டை

கேமரூன் கோட்டை

இதன் மூலம் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் பிரேசில் அணி மாற்று வீரர்கள் அனைவரும் களமிறக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியை பிரேசில் அணி தீவிரமாக எடுத்தது. இருந்தும் பிரேசில் அணி வீரர்களாக் கேமரூன் கோட்டையை தகர்க்க முடியவில்லை.

வின்னர் அடித்த கேமரூன்

வின்னர் அடித்த கேமரூன்

இரண்டாம் பாதியிலும் இரு அணி தரப்பில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் கேமரூன் அணியின் வின்சென்ட்-க்கு கிடைத்த கிராஸை, சிறப்பாக அடித்து கோலாக்கினார். இது பிரேசில் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோல் அடித்த மகிழ்ச்சியில் வின்சென்ட் ஜெர்சியை கழற்றி சுழற்ற, நடுவரால் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.

முதல் ஆப்பிரிக்கா அணி

முதல் ஆப்பிரிக்கா அணி

இறுதியாக பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் பிரேசில் அணியை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையையும் கேமரூன் அணி இந்த வெற்றியின் மூலம் படைத்துள்ளது. அதேபோல் தோவ்லியை சந்தித்தாலும் குரூப் ஜி பிரிவில் இருந்து பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS
English summary
After a stalemate of 90 minutes, Vincent Aboubacker scored for Cameroon in added time against Brazil. Cameroon became the first African nation to beat Brazil at the World Cup finals.
Story first published: Saturday, December 3, 2022, 3:14 [IST]
Other articles published on Dec 3, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X