For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிபா உலகக்கோப்பை.. சாம்பியன் அணிகள் மீதான சாபம்.. உடைத்துக் காட்டுமா பிரான்ஸ் அணி?

தோஹா: கால்பந்து உலகக்கோப்பையில் சாம்பியன் அணிகளுக்கு தொடர்ந்து வரும் சாபத்தை பிரான்ஸ் அணி உடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

200 நாடுகளுக்கும் மேல் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தொடர்தான் கால்பந்து உலகக்கோப்பை. 32 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பைத் தொடரில், பட்டம் வெல்வதற்காக ஒவ்வொரு அணிகளும் முட்டிமோத காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் 40 நாடுகளுக்கும் மேல் இருந்து கால்பந்து ரசிகர்கள், போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காக கத்தாரில் குவிந்து வருகின்றனர். இதனால் கத்தார் நாடே திருவிழா கோலம் பூண்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடுவதால், சர்வதேச அளவில் கத்தார் நாடு மீது பலரின் கவனம் குவிந்துள்ளது.

கிரிக்கெட்டை விட கால்பந்து ஏன் கெத்து??.. உலகமே கொண்டாடுவது இதற்காக தானா?..மூன்று முக்கிய காரணங்கள் கிரிக்கெட்டை விட கால்பந்து ஏன் கெத்து??.. உலகமே கொண்டாடுவது இதற்காக தானா?..மூன்று முக்கிய காரணங்கள்

சாம்பியன் அணிகள் மீதான சாபம்

சாம்பியன் அணிகள் மீதான சாபம்

இந்த நிலையில் கால்பந்து உலகக்கோப்பையில் சாம்பியன் அணிகளுக்கு தொடர்ந்து வரும் முக்கிய சாபம் பற்றி பார்க்கலாம். அது என்ன சாபமென்றால், கடந்த 5 உலகக்கோப்பைத் தொடர்களில் நடப்பு சாம்பியன்களாக பங்கேற்ற அணிகளில் 4 ஐரோப்பிய அணிகள் முதல் சுற்றோடு வீட்டிற்கு திரும்பியுள்ளன. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி என எந்த அணியும் இதற்கு விதிவிலக்கல்ல.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

அந்த சாபத்தை உடைப்பதற்காக உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணி களமிறங்கியுள்ளது. 16வது உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ள பிரான்ஸ் அணி, இதுவரை 2 முறை உலகக்கோப்பைத் தொடரை வென்றுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கிளப்களுக்கு விளையாடும் வீரர்களான கிலியன் எம்பாப்பே, கரீம் பென்சிமா, ஜிரூட், கிரீஸ்மேன், டெம்பளே என முழுக்க முழுக்க நட்சத்திர வீரர்களாக நிரம்பியுள்ளனர்.

பிரான்ஸ் பயிற்சியாளர்

பிரான்ஸ் பயிற்சியாளர்

அட்டாக்கிங் வீரர்கள் மட்டுமல்லாமல், டிஃபென்ஸ் ஆடும் வீரர்களும் பலமாக இருக்கிறார்கள். இருந்தும் போக்பா மற்றும் காண்டே ஆகியோர் காயம் காரணமாக பிரான்ஸ் அணிக்கு ஆடாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இப்படியான வீரர்கள் இடம்பெறுவதற்கு மிகமுக்கிய காரணம், அந்த அணியின் பயிற்சியாளரான டிடியர் டெஷாம்ஸ் தான். 10 ஆண்டுகளாக பிரான்ஸ் அணிக்கு பயிற்சியாக செயல்பட்டு வருகிறார்.

சாபம் உடைக்குமா பிரான்ஸ்?

சாபம் உடைக்குமா பிரான்ஸ்?

கடந்த உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பிரான்ஸ் அணி வீரர்களின் அண்மைக் கால செயல்பாடுகள் சுமாராக இருந்தாலும், உலகக்கோப்பைத் தொடருக்காக முருக்கேறி வந்திறங்கியுள்ளனர். இதனால் கால்பந்து உலகக்கோப்பையில் சாம்பியன் அணிகளுக்கு உள்ள சாபத்தை உடைத்து பிரான்ஸ் அணி சாதிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Saturday, November 19, 2022, 12:50 [IST]
Other articles published on Nov 19, 2022
English summary
There is an expectation among the fans that the French team will break the curse of the champion teams in the football world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X