5.7 கோடி ரூபாய்.. காதலிக்காக காசை வாரி இறைத்த பிரபல கால்பந்து வீரர்.. வாயை பிளந்த ரசிகர்கள்!

பிரெஞ்சு ரிவேரா : பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

அதற்காக இப்படியா காசை வாரி இறைப்பது என வியப்பில் உள்ளனர் கால்பந்து ரசிகர்கள்.

ஆம், தன் காதலிக்கு 5.7 கோடி ரூபாயை கொட்டி ஒரு நிச்சயதார்த்த பரிசை வாங்கி உள்ளார்.

ஹர்பஜன் சிங் போனா என்ன? இவர் ஒருத்தர் போதும்.. தோனி எடுத்த முடிவு.. சிஎஸ்கே அதிரடி திட்டம்!

முன்னணி கால்பந்து வீரர்

முன்னணி கால்பந்து வீரர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் முன்னணி கால்பந்து வீரர். அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் அதிகம். விளம்பரம் மூலம் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் ரொனால்டோ. தனக்கென சொந்த பிராண்டு கூட வைத்துள்ளார்.

நீண்ட நாள் காதல்

நீண்ட நாள் காதல்

அவர் நீண்ட காலமாக ஜார்ஜினா ரோட்ரிகஸ் என்பவரை காதலித்து வந்தார். அவர் ரொனால்டோ ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ஆடிய போது போட்டிகளில் அவருக்கு உற்சாகம் அளித்து வந்தது, அவர் குழந்தைகளை பார்த்துக் கொண்டது என அவருடனே வலம் வருகிறார்.

விலை என்ன?

விலை என்ன?

இந்த நிலையில், தன் காதலியை திருமணம் செய்ய முடிவு செய்த ரொனால்டோ அவருக்கு விலை உயர்ந்த மோதிரத்தை பரிசளித்துள்ளார். அதன் விலை 6,15,000 பவுண்டுகள். இந்திய மதிப்பில் சுமார் 5.78 கோடி ஆகும். அதைக் கண்டு தான் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஜார்ஜினா ரோட்ரிகஸ் அறிவிப்பு

ஜார்ஜினா ரோட்ரிகஸ் அறிவிப்பு

ஜார்ஜினா ரோட்ரிகஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ மோதிரம் அணிவித்ததை அறிவித்துள்ளார். எராளமான ரசிகர்கள் தங்கள் ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்து கூறி வருகின்றனர்.

யுவென்டஸ் அணி

யுவென்டஸ் அணி

ரொனால்டோ சமீபத்தில் தான் ஆடி வரும் யுவென்டஸ் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு மாற உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அதில் உண்மை இல்லை என அவரே தெளிவுபடுத்தி உள்ளார். யுவென்டஸ் அணியில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Cristiano Ronaldo gifts an expensive engagement ring to Georgina Rodriguez. Its price is 6,15,000 pounds. In Indian rupees, it comes around 5.7 crores.
Story first published: Sunday, September 13, 2020, 19:09 [IST]
Other articles published on Sep 13, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X