For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

இன்னும் தொடங்கவே இல்லை.. அதற்குள் சிக்கலில் சிக்கிய நடப்பு சாம்பியன்.. திடீரென விலகிய பென்சிமா!

தோஹா: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா விலகியுள்ளது, அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2022ம் ஆண்டுக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி கோப்பையை தக்க வைக்கும் முனைப்போடு கத்தாரில் கால் பதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2002ம் ஆண்டு முதல் சாம்பியன் அணிகள், முதல் சுற்றோடு வெளியேறி வருகின்றன. இதனை பிரான்ஸ் அணி நடப்பு உலகக்கோப்பையில் மாற்றிக் காட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

பட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. நடப்பாண்டில் 2வது சதம்.. இறுதியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய சவுதிபட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. நடப்பாண்டில் 2வது சதம்.. இறுதியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய சவுதி

பிரான்ஸ் அணி அறிவிப்பு

பிரான்ஸ் அணி அறிவிப்பு

இந்த நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். கரீம் பென்சிமா இடது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகுவதாக பிரான்ஸ் கால்பந்து அணி அறிவித்துள்ளது.

வெளியேறிய பென்சிமா

வெளியேறிய பென்சிமா

இதனிடையே 34 வயதான கரீம் பென்சிமா ஃபிபா கால்பந்து அமைப்பின் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார். இதனால் உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முக்கிய பங்காற்றுவார் என்று பார்க்கப்பட்டது. இதுவரை உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பென்சிமா, 3 கோல்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகில் மிக உயரிய விருதான பாலன் டி ஆர் விருதை கரீம் பென்சிமா வென்று இருந்தார்.

கிலியன் எம்பாப்பே ட்வீட்

கிலியன் எம்பாப்பே ட்வீட்

உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது குறித்து கரீம் பென்சிமா தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையில், நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால் எப்போதும் போல அணிக்கு எது சிறந்தது என்பதை பற்றி நான் இன்று சிந்திக்க வேண்டும். எனவே எங்கள் அணிக்கு ஒரு சிறந்த உலகக்கோப்பையை வெல்ல உதவக்கூடிய ஒரு வீரருக்கு என் இடத்தை நான் விட்டு கொடுத்தாக வேண்டும். ரசிகர்களாகிய உங்கள் ஆதரவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அணிக்கு சிக்கல்

பிரான்ஸ் அணிக்கு சிக்கல்

உலகக்கோப்பைத் தொடரில் பிரான்ஸ் அணி குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா ஆகிய அணிகள் உள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுடனான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிலியம் எம்பாப்பே மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

Story first published: Sunday, November 20, 2022, 15:07 [IST]
Other articles published on Nov 20, 2022
English summary
France star Karim Benzema has pulled out of the FIFA World Cup in a setback for the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X