For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கண்ணால் காண்பது பொய்... ஈரான் மகளிர் அணியில் "ஒளிந்துள்ள" 8 ஆண்கள்!

லண்டன்: ஈரான் மகளிர் கால்பந்து அணியில் உள்ள வீராங்கனைகளில் 8 பேர் ஆண்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் பெண்களாக மாறுவதற்கான பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த எட்டு பேரும் ஆண்களாக இருந்து பின்னர் பெண்களாக மாறியவர்கள். முழுமையான பெண்களாக மாறுவதற்காக அறுவைச் சிகிச்சைக்கு காத்துள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.

இவர்கள் ஆண்கள் என்று தெரி்ந்தும் கூட இவர்களை மகளிர் அணியில் இணைந்து ஆட ஈரான் தேசிய கால்பந்துக் கழகம் அனுமதித்துள்ளதாம்.

அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பு...

அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பு...

இதுகுறித்து ஈரான் கால்பந்து கழகத்தை் சேர்ந்த அதிகாரியான முஜ்தாபி ஷரிபி கூறுகையில், எட்டு வீரர்கள் ஈரான் மகளிர் கால்பந்து அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்துள்ளனர் என்றார்.

பாலின சோதனை...

பாலின சோதனை...

சமீபத்தில் ஈரான் அதிகாரிகள் தங்களது அணிகள் மற்றும் முன்னணி வீரர்களின் பாலினத்தை அறிய சோதனை நடத்தினர். அப்போதுதான் இந்த எட்டு பேரின் விவரம் தெரிய வந்ததாம். ஆனால் எட்டு பேரின் விவரமும் வெளியிடப்படவில்லை.

முகத்தை மூடியபடி...

முகத்தை மூடியபடி...

ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் முகத்தில் துணியால் மூடியபடிதான் ஆடுகின்றனர். மூலம் உடலின் எந்தப் பாகமும் தெரியாத அளவுக்கு அவர்கள் உடை அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனைகள்...

சோதனைகள்...

2014ம் ஆண்டு நான்கு வீரர்கள் பெண்கள் அணியில் இடம் பெற்றது தெரிய வந்தது. அவர்கள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் செய்யவில்லை. இதையடுத்து அவ்வப்போது இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 2010ம் ஆண்டும் கூட ஈரான் அணியின் கோல் கீப்பர் குறித்து பாலின சர்ச்சை ஏற்பட்டது.

சட்டப்பூர்வ அனுமதி...

சட்டப்பூர்வ அனுமதி...

ஈரானைப் பொருத்தவரை பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். இதனால் அங்கு இதுபோல பாலின மாறுதல் கொண்டவர்கள் மாறி மாறி விளையடுகிறார்கள். ஆனால் முறையாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.

பெண்களுக்கும் ஆர்வம்...

பெண்களுக்கும் ஆர்வம்...

ஈரானில் ஆண்களைப் போலவே பெண்களும் கூட கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஈரான் ஆடவர் அணி உலக அளவில் 59வது ரேங்க்கில் உள்ளது. ஆசிய அளவில் 13வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 4, 2015, 16:25 [IST]
Other articles published on Oct 4, 2015
English summary
Eight members of Iran's national women's football team are actually men awaiting sex change operations, reports have claimed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X