For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

லியோனல் மெஸ்ஸியின் காயத்தில் நாடகம்.. உண்மை மறைக்கப்பட்டதா?..அர்ஜெண்டினா போட்டியில் என்ன நடக்கிறது?

கத்தார்: அர்ஜெண்டினா அணிக்கு இன்று முதல் போட்டி இருக்கும் சூழலில் லியோனல் மெஸ்ஸி தனது காயத்தை மறைத்து, நாடகமாடுகிறாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் சமீபத்தில் கத்தாரில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் தற்போது வரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இன்றைய நாளில் மிகவும் பிரபலமான அர்ஜெண்டினா அணியும் சவுதி அரேபியா அணியும் கலம் காணவுள்ளது. இதனை காண்பதற்காக தான் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

செம்ம டைமிங்.. நெருப்பை பற்றவைத்த ரொனால்டோ, மெஸ்ஸி.. ஃபிபா உலகக்கோப்பைக்கு எகிறிய எதிர்பார்ப்பு!செம்ம டைமிங்.. நெருப்பை பற்றவைத்த ரொனால்டோ, மெஸ்ஸி.. ஃபிபா உலகக்கோப்பைக்கு எகிறிய எதிர்பார்ப்பு!

மெஸ்ஸி காயம்

மெஸ்ஸி காயம்

உலகின் மிகவும் பிரபலமான லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வெல்ல களமிறங்குகிறது. இதுதான் மெஸ்ஸி விளையாடப்போகும் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால், எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வென்றுக்கொடுத்துவிட்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காயம் அதற்கு தடையாக உள்ளது.

 என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

மெஸ்ஸி கடந்த சில நாட்களாக அணியினருடன் இல்லாமல் தனியாகவே தான் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாதாரணமான பயிற்சிகளை மட்டுமே அவர் செய்து வந்ததாக கூறப்பட்டது. எனினும் காயம் பாதிப்பு எல்லாம் ஒன்றும் இல்லை, மிகவும் நன்றாக இருப்பதாக அவரே விளக்கம் அளித்திருந்தார்.

பொய்யான தகவலா?

பொய்யான தகவலா?

இந்நிலையில் அவர் உண்மையை மறைத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மெஸ்ஸி பயிற்சி செய்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், அவரின் வலது காலின் மூட்டு பெரியளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. கைரோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டதன் முடிவாக அவருக்கு இந்த வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.

லீக் சுற்றில் ரிஸ்க்

லீக் சுற்றில் ரிஸ்க்

அப்படி ஒரு வீக்கத்தை வைத்துக்கொண்டு லீக் போட்டிகளில் விளையாடுவது சற்று ரிஸ்க்- ஆன ஒன்றாகும். எனினும் மெஸ்ஸின் எந்தவித பிரச்சினையும் இன்றி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தான் அணி நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அனைத்தும் சரியாகி அவர் நன்றாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்கள் ஆசையாக உள்ளது.

Story first published: Tuesday, November 22, 2022, 9:59 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
Lionel messi's injury Update ahead of Argentina vs saudi arabia match in Fifa world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X