For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிபா உலகக்கோப்பை.. முதல் போட்டியில் தோல்வி.. ஒரு கோல் கூட அடிக்கலை.. விரக்தியில் கத்தார் ரசிகர்கள்!

தோஹா: ஈகுவடார் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கத்தார் அணியின் செயல்பாடுகள் அந்நாட்டு ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டுக்கான ஃபிபா உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக 12 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்ட மைதானங்கள், புதிய விமானங்கள், கட்டிடங்கள் என அனைத்து விவகாரங்களும் பேசப்பட்டு வந்தன.

இதனிடையே உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உலகக்கோப்பையை நடத்துவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதனிடையே சர்வதேச திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது பல விமர்சனங்களையும் பெற்றது.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கத்தாரில் நடக்க உள்ளதால், 12 ஆண்டுகளாக கத்தார் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனை நேரில் கண்டு ரசிக்க கத்தார் ரசிகர்களும் ஆவலாக இருந்தனர். அதுமட்டுமல்லாமல் முதல் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக சுமாராக ஆடும் ஈகுவடார் அணியுடன் அட்டவணை வெளியாகியது.

92 ஆண்டுகளில் முதல்முறை.. மோசமான சாதனை படைத்த கத்தார்.. முதல் போட்டியில் அசால்ட் செய்த ஈகுவடார்!92 ஆண்டுகளில் முதல்முறை.. மோசமான சாதனை படைத்த கத்தார்.. முதல் போட்டியில் அசால்ட் செய்த ஈகுவடார்!

கத்தார் அணியின் செயல்பாடுகள்

கத்தார் அணியின் செயல்பாடுகள்

அதேபோல் உலகக்கோப்பையை நடத்தும் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது இல்லை என்ற வரலாறு இருப்பதால், கத்தார் அணி வெற்றிபெறும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளுக்கு ஈகுவடார் அணி ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே பதிலடி கொடுத்தது. தொடக்கம் முதலே டிஃபென்சிவ் மனநிலையில் ஆடிய கத்தார் அணியதால், ஆக்ரோஷமான மனநிலையில் ஆடிய ஈகுவடார் அணிக்கு ஈடுகொடுத்து ஆட முடியவில்லை.

பாஸ் கூட செய்ய முடியாத கத்தார்

பாஸ் கூட செய்ய முடியாத கத்தார்

அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தில் பந்தை பாஸ் கூட சரியாக செய்ய முடியாமல் கத்தார் களத்தில் திணறியது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிப்பதற்கான முயற்சியை கூட கத்தார் அணி செய்யவில்லை. அதேபோல் ஈகுவடார் அணி வீரர்களிடம் இருந்து பந்தை கைப்பற்ற பெரும் போராட்டத்தையே கத்தார் அணி வீரர்கள் செய்ய வேண்டியிருந்தது. அப்படியே பந்தை கைப்பற்றினாலும், பூமராங் போல் மீண்டும் ஈகுவடார் அணி வீரர்களின் கால்களுக்கு பந்து சென்றது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

அதேபோல் டிஃபெண்ட் செய்ய தெரியாமல், ஈகுவடார் அணிக்கு அதிகமாக ஃபீரி கிக் வாய்ப்பை கத்தார் அணி விட்டுக்கொடுத்தது. இதனை பார்த்த ரசிகர்கள் கட்டிடம், ஹோட்டம், மைதானம் என்று கட்டமைத்த கத்தார் நாடு, சிறந்த கால்பந்து அணியை கட்டமைக்கவில்லை என்று சிந்திக்க தொடங்கினர் என்றே கூறலாம். இறுதியாக 2-0 என்ற ஈகுவடார் அணியிடம் கத்தார் அணி தோல்வியை சந்தித்ததன் மூலம் 92 ஆண்டுகளில் யாராலும் படைக்க முடியாத சாதனையை கத்தார் படைத்துள்ளது.

அடுத்த போட்டிகள்

அடுத்த போட்டிகள்

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் உலகக்கோப்பைத் தொடரை நடத்திய நாடு, முதல் போட்டியில் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். சுமாராக ஆடும் ஈகுவடார் அணியிடமே மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளதால், அடுத்து வரும் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகளோடு விளையாட வேண்டிய நிலை உள்ளது. அதிலாவது ஒரு கோலை கத்தார் அணி அடிக்குமா என்ற அந்த நாட்டின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Monday, November 21, 2022, 0:06 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
The performance of the Qatari team in the first match against the Ecuadorian team has caused frustration among the country's fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X