For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சர்வதேச கால்பந்து -முதல் முறையாக பிரேசில் அணியை எதிர்கொண்ட இந்தியா..

மானாஸ்: கிரிக்கெட்டுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா எப்படியோ, அதே போல் கால்பந்துக்கு பிரேசில் அணி..

அத்தகைய பிரேசில் அணியோடு விளையாடினாலே பெருமை என மற்ற அணிகள் கருதும். இந்திய கால்பந்து வரலாற்றில் ஆடவர் அணியோ, மகளிர் அணியோ இதுவரை எவ்வித சர்வதேச போட்டிகளில் பிரேசில் அணியை எதிர்கொண்டது இல்லை.

இந்த நிலையில், பிரேசிலில் முதல் முறையாக இந்தியா, பிரேசில்,வெனிசுலா, சிலி ஆகிய நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி, பிரேசிலை எதிர்கொண்டது.

India’s Historic game against Brazil womens football

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிரேசில் அணி கேப்டன் டேபினா லாவகமாக முதல் கோல் அடித்தார். இதனையடுத்து சுதாரித்து கொண்டு இந்திய வீராங்கனைகள் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். பாதுகாப்பு அரண் போல் நின்று, பிரேசில் கோல் அடிக்கும் வாய்ப்பை தடுத்தனர். ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மனிஷா கோல் அடித்து சமன் செய்தார்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் -வெற்றியுடன் தொடங்கியது சென்னை அணிஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் -வெற்றியுடன் தொடங்கியது சென்னை அணி

ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் பிரேசில் அணி 2வது கோல் அடிக்க, முதல் பாதி 2க்கு1 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது.. முதல் பாதியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்டிதனர். ஆனால், ஆட்டத்தின் 2வது பாதி அப்படியே தலைக்கீழ் மாறியது

India’s Historic game against Brazil womens football

சர்வதேச போட்டிகளின் அனுபவமும், உடல் வலுவும் உள்ள பிரேசில் வீராங்கனைகள், இந்தியாவின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் மழை பொழிந்தனர். இதன் பிறகு இந்திய அணி வீராங்கனைகளால் பிரேசில் அணிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியில் மட்டும் பிரேசில் வீராங்கனைகள் 5 கோல் அடிக்க, 6க்கு 1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் இந்திய வீராங்கனைகளுக்கு பிரேசில் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், இரு அணி வீராங்கனைகளும் இணைந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை மாரியம்மா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 26, 2021, 15:36 [IST]
Other articles published on Nov 26, 2021
English summary
India’s Historic game against Brazil womens football. Brazil won by 6-1
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X