For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

தேசிய கீதமே புறக்கணிப்பு.. ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் கிளப்பிய சர்ச்சை..காரணம் கேட்டு ரசிகர்கள் ஷாக்

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணி தனது தேசிய கீதத்தை கூட பாடமாட்டோம் என பகிரங்கமாக கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடர் நேற்று கத்தாரில் தொடங்கியது. முதல் போட்டியிலேயே ஈக்குவடார் அணியிடம் தோல்வியடைந்து கத்தார் அதிர்ச்சி கொடுத்தது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் முதல் போட்டியாக குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி காலிஃபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா Vs நியூசி 3வது டி20 - காயம் காரணமாக கேப்டன் மாற்றம்.. பிளேயிங் லெவன், வானிலை நிலவரம் என்ன?இந்தியா Vs நியூசி 3வது டி20 - காயம் காரணமாக கேப்டன் மாற்றம்.. பிளேயிங் லெவன், வானிலை நிலவரம் என்ன?

முதல் சர்ச்சை

முதல் சர்ச்சை

இந்நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஈரான் அணி வெளியிட்ட ஒரு அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது உலகக்கோப்பை தொடரின் போது இரு அணிகளின் தேசிய கீதங்களும் அரங்கத்தில் ஒலிக்கப்படும். ரசிகர்கள் முதல் அணி வீரர்கள் வரை தேசத்திற்கான மரியாதையை தெரிவித்துவிட்டு, விளையாட தொடங்குவார்கள்.

ஈரான் வீரர்களின் முடிவு

ஈரான் வீரர்களின் முடிவு

ஆனால் ஈரான் அணி வீரர்கள், நாங்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் எங்கள் தேசிய கீதத்தை பாட மாட்டோம், மரியாதை தரமாட்டோம் என அறிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த அவர்கள், " எங்கள் நாட்டில் உள்ள அரசின் ஆட்சி பிடிக்கவில்லை, அதனை எதிர்த்து புரட்சி செய்யவே, இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினர்". கூறியபடியே போட்டியில் அவர்கள் பாடவே இல்லை. தேசிய கீதத்தை புறகணிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஈரான் நாட்டில் சமீபத்தில் சிறையில் வைத்தே ஒரு மாஷா அமினி என்ற இளம் பெண் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார். இஸ்லாமிய மதத்திற்கு உட்பட்ட உடைகளை அணியவில்லை என கைது செய்யப்பட்ட அவர், 3 நாட்கள் சிறையில் இருந்த பின் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்நாட்டின் மக்கள், கொடூர ஆட்சி நடைபெறுவதாக கூறி, அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

ஃபிஃபாவின் கடமை

ஃபிஃபாவின் கடமை

கடந்த செப்டம்பர் 16ம் தேதியில் இருந்து ஈரான் நாட்டின் ஆட்சியை கலைக்க வேண்டும் எனக்கோரி நாடு முழுவதும் புரட்சிகள் வெடித்து வருகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தான் தற்போது கால்பந்து வீரர்களும் களமிறங்கியுள்ளனர். எனினும் ஃபிஃபா அமைப்பு தனது கடமையை செய்துவிட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் தேசிய கீதத்தை போட்டு வருகிறது.

Story first published: Monday, November 21, 2022, 20:14 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
Iran Football Team Refuses to sing national anthem against England match in fifa world cup 2022, here is the reason why?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X