ISL : சொந்த மண்ணில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் சாம்பியன் பெங்களூரு!

பெங்களூரு : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளின் நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்சி ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் திங்கள் அன்று மீண்டும் களம் காணுகிறது.

2018-19ல் இறுதிப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற இரண்டு கால் இறுதிச் சுற்றில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிராக ப்ளூஸ் அணியினர் வெற்றியைப் பதிவு செய்தனர்.

அதே எதிரி அணி தற்போது 2019-20 சீசனில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குகின்றனர். பெங்களூரு எஃப்சி அணி தொடர்ச்சியாக ஹீரோ ஐஎஸ்எல் பட்டங்களை வென்ற முதல் அணியாக வரலாற்றை மீண்டும் எழுத முடியும்.

பொதுவாக எந்த அணிகளுமே தங்களது சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது விசித்திரமான ஒன்றாக உள்ளது என கூறும் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்ல்ஸ் குவாட்ராட் , பெங்களூரு அணியின் கவனம் முழுவதும், முதலில் பிளே-ஆஃப் சுற்றுகளில் இடம் பெறுவதை உறுதி செய்வதிலேயே உள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்ல்ஸ் குவாட்ராட் "நான் எனது வீரர்களை போட்டித் தன்மையுடன் இருக்கச் சொல்கிறேன், இதனால் நாங்கள் பிளே-ஆஃப்களை அடைய முடியும் என்றார். எந்த ஒரு அணியும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. சாம்பியன் பட்டத்தை வெல்வது மட்டுமே எங்கள் இலக்கு இல்லை. ஆனால் இப்போது பிளே-ஆஃப் சுற்றுகளில் வெற்றி பெற்று பிறகு பட்டத்தை வெல்வதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்கிறார் கார்ல்ஸ் குவாட்ராட்.

கடந்த சீசனில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் நார்த் ஈஸ்ட் அணியில் இருந்து வெளியேறி விட்டாலும் வேறு பல வீரர்களை அணியில் சேர்த்துள்ளனர். அதே நேரத்தில் குவாட்ராட் ஹைலேண்டர்ஸைப் பற்றி நார்த் ஈஸ்ட் அணியினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

"நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி புதிய வேறுபட்ட பயிற்சியாளருடன் முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது. எனவே இதில் கடுமையான போட்டிகளை எதிர்பார்க்கிறேன். இது எங்களுக்கு ஒரு கடினமான விளையாட்டாக இருக்கும் என்று கூறியுள்ள பயிற்சியாளர், நார்த் ஈஸ்ட் அணியின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதை கணிக்க முடியாது என்கிறார்.

அசாமோ கியான் போன்ற சில நல்ல வீரர்கள் அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடைய அணியில் மற்ற நல்ல வீரர்களும் உள்ளனர், ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதில் எங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் டிஃபெண்டிங் சாம்பியன்கள் என்றாலும், குவாட்ராட் அவர்களுக்கு இது ஒரு சுலபமான சீசனாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மற்ற அணிகள் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக ஆட முயற்சி செய்து வருவதை குவாட்ரெட் உணர்ந்துள்ளார்.

ஸ்ட்ரைக்கர் மானுவல் ஒன்வு போன்ற பல வீரர்கள் ப்ளூஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மிக்குவை வெளியேற்றும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

பொருளாதாரம் காரணமாக நாங்கள் மிகுவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் புதிய வீரர்களுக்கு நாம் விரும்பும் அனைத்து திறன்கள் உள்ளன. எங்கள் தற்போதைய வீரர்கள் வெவ்வேறு சூழலுக்கும் பொருந்துகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

பெங்களூரு எஃப்சி அணி கடந்த சீசனில் அணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும், எங்களிடம் சில புதிய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக நாம் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், மூன்று புள்ளிகளைக் கொண்டுவர முயற்சிப்போம் என்கிறார் பயிற்சியாளர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Bengaluru FC vs North East United FC match 2 preview. Bengaluru FC going to play in their home ground.
Story first published: Sunday, October 20, 2019, 20:10 [IST]
Other articles published on Oct 20, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X