டீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி!!

கோவா : கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடிய எஃப்சி கோவா அணி 2019 - 2020 ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக விளையாடுகிறது.

கடந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் கீழ் இருந்த அணியுடன் கோவா அணியினர் முதல் முதலில் மோதுகின்றனர். ஆனாலும் புதிய எழுச்சியுடன் , மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட சென்னை அணியுடன் விளையாட கோவா அணி அதீத ஆர்வமாக உள்ளது.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இரு அணிகளின் மேனேஜர்களான - செர்ஜியோ லோபரா மற்றும் ஜான் கிரிகோரி ஆகியோர் இந்த எஃப்.சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணியுடன் மூன்று சீசன்களில் உள்ளனர். ஏற்கனவே எதிர்பார்த்தபடி, எஃப்.சி கோவா அணி ஒரு பலமான நிலையில் உள்ளது. அந்த அணியைச் சுற்றி ஒரு நிலைத்தன்மை போன்ற பிரகாசம் தெரிகிறது. அந்த அணியில் உள்ள பெரும்பாலான முக்கிய வீரர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்களாவே உள்ளனர்.

ஃபெரான் கோரொமினாஸ், ஹ்யூகோ பமாஸ், அகமது ஜஹூ மற்றும் எடு பெடியா போன்ற வீரர்கள் மூன்றாவது சீசனாக கோவா அணியில் உள்ளனர். மேலும் மந்தர் ராவ் டெசாய், செரிடன் பெர்னாண்டஸ், லென்னி ரோட்ரிக்ஸ், ஜாக்கிச்சந்த் சிங் ஆகியோர் பயிற்சியாளர் லோபராவின் ஸ்டைல்களை நன்கு அறிந்தவர்கள்.

முதல் ஆட்டத்துக்காக அந்த அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட பயிற்சி மிக சிறப்பாக இருந்தது. வீரர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், தொழில் ரீதியாகவுத் மிகச் சிறந்த முறையில் உள்ளனர். இந்த சீசனில் எங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நாளைய போட்டியில் மூன்று கோல்கள் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் பயிற்சியாளர் லோபரா.

இதனிடையே சென்னையின் எஃப்சி அணி கடந்த சீசனின் மாற்றங்களுக்குப் பிறகு மீண்டும் எழுச்சியுடன் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தனது வெளிநாட்டுப் வீரரான எலி சபியாவை முழுவதுமாக புதுப்பித்து அழைத்து வந்துள்ளது மட்டுமல்லாமல் மேலும் புதிய ஆறு வெளிநாட்டினரை களம் இறக்கியுள்ளார். மேலும் ரஹீம் அலி போன்ற இந்திய வீரர்கள் உள்ளிட்ட சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய ஜான் கிரிகோரி எங்களிடம் கிட்டத்தட்ட ஒரு புதிய குழு உள்ளது. கடந்த சீசனில் எங்களிடம் ஏழு வெளிநாட்டினர் இருந்தனர், அவர்களில் ஆறு பேரை மாற்றியுள்ளோம். எங்கள் உள்நாட்டு வீரர்களுடன் நாங்கள் தற்போது தயாராக உள்ளோம் என்கிறார். புதிதாக சேர்கக்கப்பட்டுள்ள வெளிநாட்டினருடன், நான்காவது சீசனில் இருந்த அதே செல்வாக்கை தற்போது தக்க வைத்துள்ளனர் என்றும் அவர்கள் மிக சிறப்பாக விளையாடுவார்கள் என்ற தான் நம்புவதாகவும் கிரிகோரி தெரிவித்தார்.

கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோவின் கீழ் அந்த அணி ஒரு சிறப்பான அணியாக திகழ்கிறது. அவர்கள் அந்த அணியில் ஒரு சில மாற்றங்களைச் செய்துள்ளனர், அது அவர்களை சிறந்த அணியாக மாற்றியுள்ளது. அந்த அணி நிச்சயமாக எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் . எங்கள் அணியிலும் சில வெளியாட்டு வீரர்களை மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும். அதே நேரத்தில் கோவா அணியுடன் விளையாடுவது கடினமானது இல்லை என்கிறார் கிரிகோரி.

2017 - 2018 சீசனில் இருந்த அந்த ஸ்பிரிட்டுடன் மாற்றியமைக்கப்பட்ட எங்கள் அணி இந்த சீசனிலும் வெற்றி பெறும் என்கிறார் கிரிகோரி. லோபராவைப் பொறுத்தவரை, இந்த சீசனில் இறுதிப் போட்டிக்குச் சென்று ஐஎஸ்எல் கோப்பையை கைப்பற்றுவோம் என்று கூறுகிறார்.

Photos Courtesy : ISL Media

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : FC Goa vs Chennaiyin FC match 4 preview. Can CFC come with positive result after changing most of the players?
Story first published: Wednesday, October 23, 2019, 17:59 [IST]
Other articles published on Oct 23, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X