மும்பை எஃப்சியை சந்திக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. சொந்த மண்ணில் 2வது வெற்றியை பெறுமா?

கொச்சி : கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மும்பை சிட்டி எஃப்சிக்கு எதிராக கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி தனது முதல் ஆட்டத்தை தொடங்குகிறது.

எல்கோ ஸ்கட்டோரி தலைமையிலான கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சொந்த ரசிகர்களின் ஆதரவால் ஏடிகே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கினார்கள். அது போல் சொந்த ரசிகர்களின் ஆதரவால் மும்பை சிட்டி அணியை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக கேரளா அணி தனது சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடினால் தான் நன்றாக இருக்கும். 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், அவர்கள் பிளே-ஆஃப்களை அடைந்தபோது, அவர்கள் சொந்த மண்ணில் ஒரு வலுவான சாதனையைப் புரிந்தனர்.

நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு கொஞ்சம் நன்மை இருக்கிறது என்கிறார் பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரி.

மும்பை சிட்டி அணி ஒரு ஆச்சரியமான அணி என்றே சொல்லலாம். இந்த சீசனில் அவர்கள் இதுவரை விளையாடவில்லை. ஆனால் கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஏற்கனவே ஜார்ஜ் கோஸ்டா ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். கேரளா அணியின் வீரர்களுக்கு இது ஒரு நன்மை என்கிறார் எல்கோ ஸ்கட்டோரி.

மும்பை சிட்டி அணி விளையாடும் பாணி எனக்கு தெளிவாக தெரியும். ஆனால் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது குறித்த சந்தேகமும் உள்ளது என கூறும் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா இந்த போட்டியில் கேரளா அணியிடம் மிகவும் எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா, நாங்கள் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை நன்கு அறிந்துள்ளோம். இது இந்த சீசனின் முதல் ஆட்டம். அதே நேரத்தில் இது ஒன்றும் அவ்வளவு ஈஸியான ஆட்டம் அல்ல என்றே சொல்ல வேண்டும். நான் இதற்கு முன்பு கேரளா அணியின் ஆட்டத்தைப் பார்த்தேன். அந்த அணி வீரர்களையும் பயிற்சியாளரை நான் நன்கு அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மும்பை சிட்டி அணி கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றில் விளையாடும்போது, அந்த ஆட்டம் பாலோ மச்சாடோ மற்றும் மோடோ சவுகோ ஆகியோரை சுற்றியே இருந்தது. அவர்கள் தான் மும்பை அணியின் ஆட்டத்தை நிர்ணயித்தார்கள் என்றார்.

இந்த அணியில் ரவுலின் போர்ஜஸ் மற்றும் ரெய்னியர் பெர்னாண்டஸ் போன்ற பல முக்கிய இந்திய மிட்ஃபீல்டர்கள் உள்ளனர், அவர்கள் ஆட்டத்தின் நடுவில் இருந்து அணிக்கு டெம்போவை கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐலேண்டர்கள் தங்களிடம் உள்ள ஃபயர் பவரை புதிய ஆட்டக்காரர்களான செர்ஜ் கெவின் மற்றும் அமீன் செர்மிட்டி ஆகியோருடன் இணைத்துக் கொள்வார்கள்.

கேரளா அணியைப் பொறுத்தவரை டிஃபெண்டர்ஸ் இரட்டையர்களான கியானி ஜுவேர்லூன் மற்றும் ஜெய்ரோ ரோட்ரிக்ஸ் ஆகியோர் தங்கள் திறமையை முழுமையாக காட்டுவார்கள் .

கடந்த ஆட்டத்தில் செல்வாக்கு மிக்க மிட்பீல்டர் மரியோ ஆர்க்ஸ் காயமடைந்த நிலையில் கேரளாவுக்கு உடற்தகுதி குறித்த பிரச்சனை உள்ளது. அவர் இந்தப் போட்டியை போட்டியைத் தவறவிடுவார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை 2 கோல்களை அடித்த ஸ்டார் ஸ்ட்ரைக்கர் பார்தலோமெவ் ஒக்பெச்சேவுக்கு தற்போது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கோல் மழை.. கோவா அபார வெற்றி.. தோல்வியுடன் தொடரை துவக்கியது சென்னை!!

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெறுமா? அல்லது மும்பை அணி தங்கள் சீசனை வெற்றியுடன் தொடங்குமா?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs Mumbai City FC match 5 Preview. Can KBFC get their second win?
Story first published: Thursday, October 24, 2019, 11:54 [IST]
Other articles published on Oct 24, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X