For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019 : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த நார்த் ஈஸ்ட் அணி! வெற்றி பெறுமா?

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் நார்த் ஈஸ்ட் அணி வெற்றிகரமாக தகுதிதச் சுற்றுக்குள் முன்னேறி வந்துள்ளது.

அதே நேரத்தில் இறுதிப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி விரும்புகிறார்.

ஐஎஸ்எல் வரலாற்றில் நார்த் ஈஸ்ட் அணி முதன் முதலாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் நான்கு இடங்களில் இருந்தும் நார்த் ஈஸ்ட் அணிதான் இங்குள்ள எட்டு கிளப்புகளில் ஒரிஜினலானது. அதே நேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி பலமானது என்பதை அதன் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி நிரூபித்துள்ளார்.

ISL 2019 - North East United FC entered semifinals

ஷட்டரி ஒரு வரையறுக்கப்பட்ட பட்ஜெட் திட்டத்துடன் அணியை நடத்திச் சென்றார். மேலும் மிகவும் கவர்ச்சியான பெயர்கள் நிறைந்த குழுவாக நார்த் ஈஸ்ட் அணி உள்ளது. மிட்ஃபீல்டர் ஃபெடரிகோ காலிகோ மற்றும் ஸ்ட்ரைக்கர் பர்த்தலோமிவ் ஆக்பேசே ஆகியோர் இந்த அணியை லீக் முழுவதும் சிறப்பாக நடத்திச் சென்றுள்ளனர். ஆனால் நார்த் ஈஸ்ட் அணியின் சிறப்பம்சமே அதன் தற்காப்பு பாணி ஆட்டம்தான்.

இந்த சீசன் தொடங்கும்போது நார்த் ஈஸ்ட் அணி ஒரு பலவீனமான அணி என்று தான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கள் அணி அதிக கோல்களை அடித்துள்ளது என்கிறார் ஷட்டடரி. எங்கள் அணி ஒரு நல்ல தற்காப்பு அணி என்பதை இந்த சீசனில் பதிவு செய்துள்ளோம்.

ISL 2019 - North East United FC entered semifinals

மிஸ்லாவ் கோமோர்ஸ்கி மற்றும் மாடோ க்ரிக் ஆகிய குரோஷிய வீரர்கள் மிட் ஃபில்டில் சிறந்த பங்களிப்பை உருவாக்கியுள்ளனர். ஆனால் தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்துள்ள வீரர்கள் அந்த அளவுக்கு நம்பிக்கையை தூண்டவில்லை. என்கிறார் ஷட்டரி.

ரீகன் சிங், ராபர்ட் லால்ட்லாம்னு மற்றும் கீகன் பெரேரா ஆகியோர் சராசரியாக விளையாடும் வீரர்கள். ப்ராட் லக்ரா ஐஎஸ்எல் போட்டிகளில் முதன் முறையாக விளையாடுகிறார்.

பவன் குமார் மற்றும் குர்விந்தர் சிங் ஆகியோர் மத்திய பகுதியில் இருந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பவன்குமார் மிக சிறப்பாக விளையாடி வருகின்றார். ஆனால் குர்விந்தரின் பங்கு தற்போது மிக கணிசமாக குறைந்துள்ளது.

கோமோர்ஸ்கி இந்த சீசனில் காயம் காரணமாக நிராகரிக்கப்பட்டார். அந்த இழப்பைத் தடுப்பதற்காக குர்வீந்தர் சிங் களம் இறக்கப்பட்டார். தற்போது இந்த தகுதிச் சுற்றில் மற்றொரு பிரச்சனை உருவாகியுள்ளது.

கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்.சி.க்கு எதிரான இறுதி லீக் போட்டியில் குர்விந்தர் சிங் வெளியேறினார், பெங்களூரு எதிரான அரை இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஷட்டரி நிறைய யோசனைகளைப் பெற்றார். அதே நேரத்தில் குர்வீந்தர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து, நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் மற்றொரு சிறப்பாக ஆட்டத்தை அளித்தனர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் விளையாடிய ஒரு வீரர் கிளீன் ஷீட் வைத்திருந்தார். எங்களது ஆட்டம், திறமை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களது திறமையால் நாங்கள் அதிக புள்ளிகளை எடுப்போம் என்கிறார் ஷட்டரி.

குர்வீந்தர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் எங்கள் அணியின் தடுப்பாட்டத்தின் மூலம் நாங்கள் அரையிறுதிப் போட்டில் வெற்றி பெறுவோம் என்கிறார் எல்கோ ஷட்டரி.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, March 4, 2019, 19:04 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
ISL 2019 - North East United FC entered semifinals. Will they win?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X