For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019 : புனே அணியை மாற்றிக் காட்டிய பில் பிரௌன்.. இவரை முதல்லயே கோச்சா போட்டுருக்கலாமே?

மும்பை : புனே அணியின் பயிற்சியாளர் பில் பிரௌன் இது வரை நம்பிக்கையை இழக்கவில்லை. இங்கிலாந்து பயிற்சியாளர் பில் பிரௌன், ஹல் சிட்டி அணியில் 5 ஆண்டுகளும் சுவிண்டன் டவுன் அணியில் நான்கு ஆண்டுகளும் பயிற்சியாளராக இருந்தார்.

ஆனால், அவர் எஃப்சி புனே சிட்டி அணியின் பயிற்சியாளராக பொறுப்பிற்கு இந்தியாவுக்கு வந்தபோது, அவர் தன்னை நிரூபிக்க ஆறு ஆட்டங்கள் மட்டுமே இருந்தன.

ISL 2019 - Phil Brown impact in FC Pune City

இந்த சீசனிலும், அடுத்த சீசனிலும் புனே அணியின் பயிற்சியாளராக பில் பிரௌன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் அரையிறுதி ஆட்டத்தில் புனே அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதியூம் ரெட்டி ஓரளவுக்கு சமாளித்தார்.

அதே நேரத்தில் புனே அணியை யாரும் எந்த முயற்சி எடுத்தாலும் முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டுவர முடியாது என்பதே உண்மை. ஆனால் பில் பிரௌன் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த அணியின் உண்மையான திறமையை கண்டு பிடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

ISL 2019 - Phil Brown impact in FC Pune City

புனே அணி வீரர்கள் ஐஎஸ்எல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்து ஆட்டத்தை தொடர வேண்டும் என்பதே எனக்கு விருப்பம் என தெரிவித்துள்ள பிரௌன், ஒரு மோசமான மனநிலையில் இருந்த புனே அணி வீரர்கள் நான் பொறுப்பேற்ற பிறகு தற்போது புத்துணர்வுடன் ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டதாக கூறினார்.

பில் பிரௌன் சென்னை அணிக்கு எதிராக புனே அணி விளையாடிய போது தனது முதல் வெற்றியை பெற்றுத் தந்தார். அந்த முதல் வெற்றிக்குப் பிறகு ஏடிகே அணியுடன் டிரா செய்தது. இந்த இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு புனே அணியின் தன்னம்பிக்கை வளர்ந்தது.

புனே அணியின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அந்த அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டேன். தொடர்ந்து அந்த அணி தோல்வி அடைந்ததை நான் ஒரு பிரச்சனையாக கருதவில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற இரு போட்டிகளில் புனே அணியின் வெற்றியே அதை உறுதிப்படுத்தி இருக்கிறது என்கிறார் பிரௌன். அடுத்து நான்கு வாரங்கள் புனே அணியிடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். இதனால் நான் எனது முழு ஆதரவையும் புனே அணிக்கு தருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் மிகுல் ஏஞ்சல் தலைமையில்ன புனே அணியின் அணுகுமுறை வேறுமாதிரி இருந்தது. தற்போது அந்த அணுகுமுறை வேறு மாதிரி உள்ளது. இப்போது புனே அணி தனது திறமையை நிரூபித்துள்ளது.

ISL 2019 - Phil Brown impact in FC Pune City

புனே அணி தற்போது 15 போட்டிகளில் பங்கேற்று 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தற்போது 3 மற்றும் 4 ஆவது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் மற்றும் மும்பை அணிகளின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் புனே அணி 27 புள்ளிகளைப் பெற வேண்டும். ஆனால் புனே அணி அந்த இரண்டு அணிகளை மேற்கொண்டாலும் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஏடிகே அணிகளையும் ஜெயிக்க வேண்டும்.

ஆனாலும் பில் பிரௌன் தனது அணி வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளார். புனே அணி வீரர்கள் மீண்டும் உற்சாகமாக விளையாடத் தொடங்கியுள்ளனர். புனே அணி பயிற்சியாளராக பில் பிரௌன் இந்த சீசன் தொடக்கத்திலேயே அமர்த்தப்பட்டிருந்தால் ஒரு வேளை அந்த அணி முதலிடத்தில் இருந்திருக்கலாம்.

ஐபிஎல் 2019 : முதல் போட்டியில் தோனியின் சிஎஸ்கே-வோடு மோதப் போவது யார்? அட்டவணை வெளியானது! ஐபிஎல் 2019 : முதல் போட்டியில் தோனியின் சிஎஸ்கே-வோடு மோதப் போவது யார்? அட்டவணை வெளியானது!

Story first published: Tuesday, February 19, 2019, 18:47 [IST]
Other articles published on Feb 19, 2019
English summary
ISL 2019 - Phil Brown impact in FC Pune City is clearly visible now.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X