For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019 : நார்த் ஈஸ்ட் அணியின் இரட்டையர்கள் அரையிறுதியில் வெற்றி தேடித் தருவார்களா?

கால்பந்து என்பது ஒரு குழு விளையாட்டு. அது மட்டுமல்லாமல் ஒரு கூட்டு முயற்சியின் மூலமே கால்பந்து போட்டிகளில் வெற்றி கிட்டும். இதில் ஒரு சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு என்பது சில நேரங்களில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கோல் அடிக்கும்போது தனிப்பட்ட வீரர்கள் அடிக்கும் பந்துகள் பெருமைக்குரியதாக இருக்கும்.

ISL 2019 - Will North East Duo bring favour this season?

கடந்த சீசனில் எஃப்சி கோவா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதற்கு காரணம், ஃபெரான் கொராமினால் அடித்த கோல்கள் தான். அதே நேரத்தில் மானுவல் லாசரேட் அவருக்கு உறுதுணையாக இருந்து கோல் அடிப்பதற்கு செய்த உதவியை யாரும் மறக்க முடியாது.

இந்த முறை ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் நார்த் ஈஸ்ட் அணி முதன் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெடோரிகோ காலிகோ தனது பக்கத்திலிருந்தால், தன்னால் தாக்குப் பிடித்து விளையாட முடியும் என்கிறார், நட்சத்திர ஆட்டக்காரர் பர்த்தோலோம் ஓக்பேச்.

ISL 2019 - Will North East Duo bring favour this season?

இது குறித்து கருத்துத் தெரிவித்த நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி, பர்த்தோலோம் ஓக்பேச் சிறப்பாக விளையாடி நல்ல புள்ளிகளைப் பெற்றிருப்பது , தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மற்ற அணிகளுடன் எங்கள் அணியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது எங்கள் அணி பர்த்தோலோம் ஓக்பேச் மற்றும் ஃபெடோரிகோ காலிகோ ஆகியோரை நம்பித்தான் இருக்கிறது. எனவே அந்த இருவருக்கும் தான் அனைத்துப் பெருமைகளும் போய் சேரும்.

இந்த சீசன் முழுவதும் பர்த்தோலோம் ஓக்பேச் மற்றும் ஃபெடோரிகோ காலிகோ இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

முன்னாள் பிஎஸ்ஜி மற்றும் ரியல் வால்டோடிட் வீரரான பர்த்தோலோம் ஓக்பேச் இந்த சீசனில்தான் நார்த் ஈஸ்ட் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இவர் 17 ஆட்டங்களில் 12 கோல்கள் அடித்துள்ளார். அதே நேரத்தில் ஃபெரான் கொராமினாஸ் 15 புள்ளிகளைப் பெற்றுள்ளார், இதே போல் பந்தை கடத்திச் சென்று ஷாட் அடிப்பதிலும் பர்த்தோலோம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ISL 2019 - Will North East Duo bring favour this season?

எதிர் அணிகளைப் பொறுத்தவரை நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தோலோம் ஒரு அபாயகரமான மனிதர் என்றே கணக்கில் வைத்துள்ளனர். பர்த்தோலோம் பந்தைப் கடத்தி அதன் பின்னால் ஓடி, தூரத்திலிருந்து அடித்து அதை கோல் ஆக்குவார். இது நைஜீரியன்களுக்கு இயல்பாகவே வருகிறது.

அதே நேரத்தில் பர்த்தோலோமின் தனிப்பட்ட திறமை மட்டும் நார்த் ஈஸ்ட் அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு வரவில்லை. அந்த அணி நிர்வாகிகள் பர்த்தோலோமுடன் இணைந்து விளையாட ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் தான் ஃபெடோரிகோ காலிகோ.

தடுப்பாட்டம், பந்தை கடத்திச் செல்லுதல், போன்றவற்றில் சிறந்து விளங்கும் ஃபெடோரிகோ காலிகோ, சரியான ரேத்தில் பந்தை பர்தலோமுக்கு பாஸ் பண்ணிவிடுவார். இந்த ஸ்டைல் ஆட்டம் பர்த்தோலோம் ஓக்பேச் மற்றும் ஃபெடோரிகோ காலிகோ ஆகியோருக்கு ஒர்க் அவுட் ஆனது.

காலிகோ 4 கோல்கள் அடித்ததோடு மட்டுமல்லாமல், 5 கோல்கள் அடிக்க உதவி செய்திருக்கிறார். இந்த இரட்டையர்கள் மட்டும் நார்த் ஈஸ்ட் அணிக்காக 22 கோல்களை அடித்துள்ளனர்.

எல்கோ ஷட்டரியின் இந்த நார்த் ஈஸ்ட் அணி மார்ச் 7 ஆம் தேதி அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. நார்த் ஈஸ்ட் அணியின் இந்த நட்சத்திர இரட்டையர்களான பர்த்தோலோம் ஓக்பேச் மற்றும் ஃபெடோரிகோ காலிகோ வெற்றி தேடித் தருவார்களா?

Story first published: Wednesday, March 6, 2019, 10:20 [IST]
Other articles published on Mar 6, 2019
English summary
Indian player Ravindra Jadeja has set a record, who scored 2000 runs and 150 wickets in ODIs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X