For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஆர்சனெல் கால்பந்து அணியின் 30 சதவீத பங்கு.. ரூ.16 ஆயிரம் கோடிக்கு வாங்குகிறார் உரிமையாளர்!

இங்கிலாந்து கால்பந்து கிளப்பான ஆர்சனெலின் 30 சதவீதப் பங்குகளை ரூ.16 ஆயிரம் கோடிக்கு வாங்குகிறார் குரோயன்கே. இதன் மூலம் அணியின் முழு கட்டுப்பாடும் அவருக்கு கீழ் வருகிறது.

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்சனெல் கால்பந்து கிளப் அணியின் உரிமையாளர் ஸ்டான் குரோயன்கே, கிளப்பின் 30 சதவீதப் பங்கை ரூ. 16 ஆயிரம் கோடிக்கு அலிஷர் உஸ்மனோவிடம் இருந்து வாங்குகிறார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்சனெல் கால்பந்து கிளப் அணி, மிகவும் பிரபலமான அணியாகும். இந்த கிளப்பின் 67 சதவீதப் பங்கை அதன் உரிமையாளர் ஸ்டான் குரோயன்கே வைத்துள்ளார். மீதமுள்ள 33 சதவீத பங்குகளில் அலிஷர் உஸ்மனோவ் 30 சதவீதத்தை வைத்துள்ளார்.

Kroenke to take full control of arsenal

ஆர்சனெல் அணியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு குரோயன்கே முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி, உஸ்மனோவிடம் உள்ள 30 சதவீத பங்குகளை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

அதில், ரூ.16 ஆயிரம் கோடிக்கு, 30 சதவீத பங்குகளை உஸ்மனோவிடம் இருந்து குரோயன்கே வாங்குகிறார். இதை லண்டன் பங்கு சந்தைக்கு குரோயன்கே தெரிவித்துள்ளார். வேறு சிலரிடம் உள்ள மீதமுள்ள மூன்று சதவீதப் பங்குகளையும் வாங்குவதற்கான நடவடிக்கைகள் துழங்கியுள்ளது.

அமெரிக்காவின் டென்வர் நக்கட்ஸ் கூடைப்பந்து அணி, லாஸ் ஏஞ்சலஸ் ரேம்ஸ் அமெரிக்கன் கால்பந்து அணியை ஆகியவற்றின் உரிமையாளராகவும் குரோயன்கே உள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாக ஆர்சனல் அணியின் கோச்சாக இருந்த ஆர்செனே வெங்கர் இந்தாண்டு ஏப்ரலில் விலகினார். பவுதிய கோச் உனாய் எமேரி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்து கிளப் அணிகள் இடையேயான போட்டிகள் விரைவில் துவங்க உள்ளன.

Story first published: Tuesday, August 7, 2018, 18:00 [IST]
Other articles published on Aug 7, 2018
English summary
Stan kroenke buys 30 percent of arsenal share at rs.16 thousand crores.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X