For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்… கடைசி நேர த்ரில் வெற்றி.. காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்

பாரிஸ்: ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பரபரப்பான நாக் அவுட் சுற்றில், மான்செஸ்டர் யுனைடெட் அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நாக் சுற்று பாரிஸில் நடைபெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் தடுப்பு வீரர் திலொ கேஹ்ரர், சக வீரருக்கு பந்தை பாஸ் செய்வதாக மான்செஸ்டர் அணியின் லுகாகுவுக்கு வழங்கினார். அதை பயன்படுத்திக்கொண்ட லுகாகு இரண்டாவது நிமிடத்திலேயே அசத்தலான கோல் அடித்தார்.

இலங்கையை சுருட்டி வீசிய தெ. ஆ... மிரள வைத்த பவுலிங்... 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இலங்கையை சுருட்டி வீசிய தெ. ஆ... மிரள வைத்த பவுலிங்... 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அட்டாக்கிங் ஆட்டம்

அட்டாக்கிங் ஆட்டம்

தொடர்ந்து, பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணி அட்டாக்கிங் முறையில் ஆடியது. சக வீரர் ஜூவான் பெர்னட் 12வது நிமிடத்தில் அணியின் முதல் கோல் அடித்தார்.

30வது நிமிடத்தில் கோல்

30வது நிமிடத்தில் கோல்

இதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 30வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் இளம் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் கோலை நோக்கி அடித்த பந்தை, கோல்கீப்பர் புபான் சரியாக பிடிக்காததால் பந்து ரீபவுன்ட் ஆனது.

லுகாகு கோல்

லுகாகு கோல்

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லுகாகு இரண்டாவது கோல் அடித்தார். பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை பெற்றும் கோலடிக்க முடியாமல் போனது.

அனல் பறந்த ஆட்டம்

அனல் பறந்த ஆட்டம்

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அனல் பறந்தது. மான்செஸ்டர் யுனைடெட் அணியைச் சேர்ந்த டியாகோ டலோட் அடித்த பந்து, பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் மார்கின்யோஸின் கையில்பட்டது.

பெனால்டியில் கோல்

பெனால்டியில் கோல்

இதன் விளைவாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதனை அணியின் இளம் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் கோலாக மாற்றினார்.

மான்செஸ்டர் வெற்றி

மான்செஸ்டர் வெற்றி

இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஓல்டு டிரப்போர்டில் நடைபெற்ற முதல் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் 2-0 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

3 கோல்கள்

3 கோல்கள் அடித்தனர்

நாக் சுற்றுப் போட்டிகளில் இரண்டு போட்டிகளையும் சேர்த்து இவ்விரு அணிகள் தலா மூன்று கோல்களை அடித்துள்ளனர். ஆனால், அவே போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, பாரிஸ் அணியை விட ஒரு கோல் அதிகமாக அடித்திருந்தால், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதிக்கு முன்னேற்றம்

இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில், சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட்டாலும் எதிரணியின் மைதானத்தில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை மான்செஸ்டர் யுனைடெட் பெற்றுள்ளது.

Story first published: Friday, March 8, 2019, 12:07 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
Manchester United lost first leg 2-0 but go through on away goals after stunning 3-1 win in Paris.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X