For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"கோப்பைய கையில கொடுங்கடா" கெத்தாக கத்தாரில் களமிறங்கிய பிரேசில்.. பல அணிகள் அஞ்சுவது ஏன்?

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், பிரேசில் அணியின் வீரர்கள் மற்றும் அணுகுமுறை பற்றி பார்க்கலாம்.

22வது உலகக்கோப்பை தொடர் நவ.20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்கவுள்ள நிலையில், கால்பந்து ஜுரம் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. "விடைகொடு சாமி நான் போகின்றேன்" என்று ஐபிஎல் ரிட்டன்சன் பட்டியலை பார்த்துவிட்டு, அப்படியே உலகக்கோப்பை பக்கம் பார்வையை இந்திய ரசிகர்களும் திருப்பி உள்ளனர்.

உலகக்கோப்பை என்ற பெயரில் வெறும் 25 முதல் 30 அணிகளுக்கு மட்டும் போட்டியை நடத்தாமல், ஃபிபாவில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் உலகக்கோப்பையில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும். அதனால் தான் கால்பந்து உலகக்கோப்பைக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அப்படி இதுவரை நடத்தப்பட்ட 22 உலகக்கோப்பை தொடர்களில் 5 முறை உலகக்கோப்பை வென்ற அணி தான் பிரேசில்.

ISL 2022 கால்பந்து தொடர் - புத்தம் புது அணியுடன் களமிறங்கும் சென்னை.. முக்கிய வீரர்கள் யார்?ISL 2022 கால்பந்து தொடர் - புத்தம் புது அணியுடன் களமிறங்கும் சென்னை.. முக்கிய வீரர்கள் யார்?

பிரேசில் அணி

பிரேசில் அணி

ஆனால் 2022ம் ஆண்டுக்கு பிறகு யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. அதன்பின்னர் பிரேசில் அணியின் செயல்பாடுகள் உலகக்கோப்பைத் தொடரில் எடுபடவில்லை. ஆனால் இம்முறை முறுக்கேறி, யாரும் கற்பனை செய்ய முடியாத பலத்தோடு கத்தாரில் வந்து பிரேசில் அணி இறங்கியுள்ளது. அப்படி என்ன என்று எட்டி பார்த்தால், அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே நட்சத்திரங்கள் தான்.

தடுப்பாட்ட வீரர்கள்

தடுப்பாட்ட வீரர்கள்

பிரேசில் அணியின் தடுப்பாட்ட பிரிவில் மார்கின்ஹோஸ், டியாகோ சில்வா, மிலிட்டோ, டெல்லாஸ், டேனிலோ இருக்கிறார்கள். இவர்களுடன் அனுபவமிக்க டேனி ஆல்வஸ் மற்றும் பிரீமர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிஎஸ்ஜி, யுவண்டஸ், ரியல் மேட்ரிட், செல்சீ உள்ளிட்ட அணிகளுக்காக தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர்கள். இதுதவிர நடுகள வீரர்களாக முக்கிய கிளப் அணிகளுக்கு ஆடும் பெபின்ஹோ, கேசிமொரோ, ப்ரெட் களமிறங்க உள்ளனர். அதேபோல் லூகாஸ், பிரூனோ ஆகியோரும் இருக்கிறார்கள்.

கோல் கீப்பர்கள்

கோல் கீப்பர்கள்

பிரேசில் அணியின் கோல் கீப்பர்கள் அலிஸ்சன், எடர்சன் இருவருமே பிரீமியர் லீக் தொடரில் நேர்-எதிர் அணிகளான லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய தூண்களாக இருப்பவர்கள். இப்போது இருவரும் பிரேசில் அணிக்கு களமிறங்க உள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் திறமை வாய்ந்த வீவர்டனும் அணியில் இருக்கிறார்.

அட்டாக்கிங் வீரர்கள்

அட்டாக்கிங் வீரர்கள்

இங்கு தான் பிரேசில் அணியின் மிக முக்கிய பலம் உள்ளது. இளம் வீரர்களான ஆன்டணி, ஜீசஸ், மார்டினல்லி, நெய்மர், பெட்ரோ, ரபின்ஹா, ரிசர்ல்சன், ஜீசஸ், ரோட்ரிகோ, வினிசியஸ் விளையாடுகிறார். பிரேசில் அணியில் முன் கள வீரராக யாரை மாற்று வீரராக இறக்கினாலும், கடைசி நிமிடம் வரை தாக்குதல் ஆட்டத்தில் சிறு துளியும் தொய்வு இருக்காது. இவர்களை ஒரு பக்கம் சமாளிப்பதே எதிரணிகளுக்கு சவாலாக இருக்கும் சூழலில், இன்னொரு பக்கம் கோல் அடிப்பது பற்றி கற்பனை செய்யவே முடியாத விஷயம்.

பயிற்சியாளரின் அணுகுமுறை

பயிற்சியாளரின் அணுகுமுறை

இதுமட்டுமல்லாமல் பிரேசில் அணியின் பயிற்சியாளராக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து டிடே பணியாற்றி வருகிறார். இவரது பயிற்சியில் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான வீரர்கள், சர்வதேச கால்பந்து உலகத்தை ஆட்சி செய்து வருகிறார்கள். அதிக அனுபவமும், வீரர்களுடன் அதிக ஆண்டுகள் பணியாற்றிய வாய்ப்பும் உள்ளதால், டிடேவின் அணுகுமுறை மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல் கோப்பையை வெல்லும் அணியாகவும் பிரேசில் அணியே பெரும்பாலானர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நெய்மர் காயமடைந்தாலும், அவருக்கு மாற்றாக களமிறங்கும் வீரரும் அதே அளவிற்கு திறமையை வெளிப்படுத்தும் திறன் உள்ளதால், அந்த அணியின் ஆக்ரோஷத்தில் எந்த குறைவும் இருக்காது.

Story first published: Thursday, November 17, 2022, 19:44 [IST]
Other articles published on Nov 17, 2022
English summary
With the FIFA World Cup kicking off in a few days, let's take a look at Brazil's players Weakness and Attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X